உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"சாகப்போவது உறுதி; சாகுமுன் எனக்குள்ள ஐயத்தைத் தீர்த்தால் நன்றாகும்; ஐயத்துடன் சாவது என்றும் தீரா ஐயந்தானே" என்றான் அவன்.

“கேள்” என்றது பேருரு!

66

"இவ்வளவு பேருரு உடைய நீ எப்படி இச்சிறிய செப்பினுள் ஒடுங்கிக் கிடந்தாய்! உன்னால் எப்படி இவ்வளவு சிறிய வடிவம் கொள்ள முடிகிறது?" என்றான்.

"இதோ பார்" எனத் தன் உருவத்தை ஒடுங்கிச் செப்பினுள் புகுந்தது. பேய்ப் பேருரு!

மிக விழிப்பாக இருந்து மூடியால் செப்பை இறுக்கி மூடி, மீண்டும் நீருக்குள் தள்ளிவிட்டான் தூண்டில் போட்டுத் தூக்கியவன்.

இஃது “அறிவியல் அழிவியல் ஆகாமல் இருக்க வேண்டும்” என்பதற்காகச் சொல்லப்படும் புனை கதைகளும் ஒன்று.

இற்றை வன்முறைக் கேட்டை எண்ணும்போது, அதனை ஒடுக்க நினைப்பார்க்குத் தோன்ற வேண்டும் கதை ஈதாம்! வன்முறை நாட்டில் பெருகிவிட்டது!

உண்மை!

வன்முறைக் கேடு - நாடு தழுவிய - ஏன் உலகம் தழுவிய - எரிமலைக் குழம்பாக வெடித்து வெளிப்படுகிறது!

உண்மை! மிக உண்மை!

வன்முறையை வன்முறையால் அழிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது! முடியும் என்றால் "தீயைத் தீயால் அணைக்கலாம்'! நீரை நீரால் அணையிட்டு நிறுத்தலாம்"! மக்களுக்கும் மாக்களுக்கும் ஒரு வேறுபாடு ஒரே ஒரு அறிவு, குறைந்ததுதான். நல்லவை, தீயவைகளைக் கண்டு தீயவற்றை நீக்கித், தூயவற்றைக் கைக்கொள்ளும் இயல்பொன்றே விலங் கினின்று மாந்தனை மேலாக்குகிறது. அவ்வறிவில்லார் உடலமைப் பால் மாந்தராவரேயொழிய உள்ளத்தால் விலங்கேயாவர்.

விலங்கியல்பு, நினைந்தறிய மாட்டாமையால் உடல் வலிமையைத் திரட்டி திடுமெனத் தீங்கு செய்ய முந்தும். தீங்கிற்கு மாறுதல் தீங்கென்பது விலங்கியல்பாகும்.