உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இறை முறை

ஒருவர் மீனுக்காகத் தூண்டில் போட்டார்.

தூண்டில் இழுக்க முடியாதவாறு எங்கேயோ சிக்கிக் கொண்டது.

பெரியமீன் ஒன்று மாட்டிக்கொண்டதாக நினைத்து மகிழ்வுடன் தூண்டிலை வலிமையாக இழுத்தார்.

தூண்டில் எளிமையாக வரவில்லை. தூண்டில் போடவரும் ழுவையை விட்டு விடவில்லை. தொடர்ந்து வன்மையாக இழுத்தார். தூண்டில் வெளியே வந்தது. ஆனால், அதில் சிக்கியது மீன் இல்லை, ஒரு செப்புக்கலம் சிக்கியது.

செப்புக்கலத்தின் அழகும்

அழகும்

போட்டவர்க்கு வியப்பளித்தன.

அமைப்பும் தூண்டில்

மீன் மாட்டவில்லை என்ற கவலை ஒழிந்தது. பெரும் புதையல் சிக்கிக் கொண்டதாகப் பூரித்தார். மேலே இழுத்ததும் அச்செப்பு கெட்டியாக மூடியிருக்கக் கண்டார்.

முயன்று மூடியைத் திறந்தார். என்ன வியப்பு? பேரொளி யுடனும், பேரொலியுடனும், தூண்டில் போட்டவர் அஞ்சி நடுங்குமாறு செப்புக் குள்ளிருந்து பேருருவம் ஒன்று தோன்றிற்று.

தோன்றிய உருவத்தின் ஒளியும், ஒலியும், உயரமும், தோற்றமும் தூண்டில் போட்டவரை நடுங்கி ஒடுங்க வைத்தன. என்னைக் கிளப்பி விட்டுவிட்டாய்; ஒடுங்கிக் கிடந்த என்னை உயரே தூக்கி வெளியேற வைத்துவிட்டாய்! உன்னைப் பழி வாங்குவேன்; பின்னர் யார் யாரைப் பழிவாங்க நினைக்கிறேனோ அவர்களை யெல்லால் பழி வாங்குவேன்" என்றது வெளிப்பட்ட பேரு!

திகைத்தான் தூண்டிலான். தம் செயல் தமக்கு அழிவாக அமைந்ததை நினைந்தான். அதற்குள் “உன்னைக் கொல்லப் போகிறேன்" என்றது பேருரு (பூதம்).