உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. ஊழிற் பெருவலி யாவுள?

1993 அக்டோபர் 2 செய்தித்தாள்!

நில நடுக்கம் -இறப்பு 40 ஆயிரம் பேர்!

ஒருவரை ஒருவர் கொன்றுவிட்டார் அவரைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கலாம்!

நிலநடுக்கச் சாவும் அழிவும் எத்தனை ஆயிரம் ஆனாலும் எதனைக் குற்றக் கூண்டில் நிறுத்தமுடியும்? எதனைத் தண்டிக்க முடியும்?

அறிவியல் வளர்ந்து அண்டம் கடந்து அண்டம் போய் ஆராயும் நாளிலே செயற்கைக்கோள் இயற்கைக் கோளை நொடி நொடியும் படம் பிடித்துக் காட்டும் நாளிலே -நில நடுக்கம் வரும் என்பதை அறிந்து அறிவித்தும் காக்க முடியாத அளவிலே நிகழ்ந்துள்ள மராட்டிய நாட்டு நில நடுக்கத்தைப் பார்க்கும் போதுதான்,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்

99

என்னும் குறளின் உறுதிப்பாடு விளங்கும்.

மராட்டிய நாட்டு இலத்தூர், உசுமானாபாத்து மாவட்டங் களில் 1.10.93 விடிகாலைக்குமுன் 3.56 தொடங்கி 6.48க்குள் ஏழுமுறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது! “உறங்குவது போலும் சாக்காடு" என்பது போல், உறக்கம் விழியாமலே இறப்புக்கு ஆட்பட்டவர் பல்லாயிரவர்!

ஊர் ஊராகப் புதையுண்ட நடுக்கத்தில் யார் யார் இறப்பென எப்படி எண்ணுவது?

எரிபொருள் கிட்டாமல் காட்டை வெட்டியழிப்பது போல், குவித்துக் குவித்து எரிமூட்டியும் முடியாமல், பக்க மெல்லாம் நாறும் சவங்களின் கணக்கென்ன?