உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இடிபாட்டின் உட்கிடந்து எடுக்கமுடியாமலே நாறிய பிணங்கள் எத்தனை?

நில அதிர்விலே மின் தொடர்பும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு, மீட்புப்பணியும் தடைப்பட்ட பாடென்ன? மீட்புப் பணிக்குப் படைவீரர் 15000 பேர் சென்றனர்!

காவல் துறையர் கவிந்து நின்றனர்!

தொண்டர் குழுக்களும் தொடர்ந்தன!

போர்க்கால அடிப்படையில் பணி முடுக்கமாயிற்று! எனினும் என்ன? தொடர்மழை அடைமழை!

எங்கும் பிணம்! எதற்கும் இடர்ப்பாடு!

நிலநடுக்கப் போதில் கெட்டி வீட்டுக்காரரே மிக மிகப் பட்டழிந்துள்ளனர். கூரை வீட்டினர் ஓரளவு தப்பியுள்ளனர்.

கில்லாரி என்பது கெட்டிவீடே மிக்க பகுதியாம்; அப்பகுதியில் மட்டும் 21 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் இறந்தனராம்!

33 பேர் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே ஒருவர் தப்பிப் பிழைத்தாராம்! இவ்விழப்பில் இருந்து அவர், எப்படி மீள்வார்?

நாறும் பிணத்தின் நல்ல சுவைகாணும் நாய்கள், இறந்தோர் உறுப்புகளை உதறிக் குதறின!

சவந்தின்னிக் கழுகுகளோ, எங்கும் வட்டமிட்டுக் குத்திக் குடைந்து திரிந்தன!

இந் நாயும் கழுகும் மாந்தர் உருக்கொண்டது போன்ற கயவர்களோ, அகப்பட்டதைச் சுருட்டும் அழிசெயலை விடாது செய்தனர்!

மீட்புப் பணிக்கு நூறுகோடி தேவைப்படுமாம்!

மீண்டும் புதுப்பித்து மறுவாழ்வளிக்க ஆயிரம் கோடி தேவைப்படுமாம்!

மாநிலம் முந்துகிறது! நாடு கை கொடுக்கிறது! உலகம் ஒலி கொடுக்கிறது!

உணவும் மருந்தும் உடையும் குவிகின்றன! கூடாரங்களும் குடிசைகளும் கிளர்கின்றன!