உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்”

121

என்னும் வாய்மொழிக்கு ஒப்ப மீட்புப் பணிகள் நிகழ்கின்றன!

எனினும் ஊழை வென்று விட முடிந்ததா? முடியுமா?

-

இறந்தவரை - சிதைந்தவற்றை அப்படியே உயிர்ப்பிக்கவும்

எழுப்பவும் எவரால் இயலும்?

இந்த நில நடுக்கம் அரசுக்கு அறிவிப்பதென்ன? அறிவியல் அறிஞர்க்கு அறைவது என்ன?

"இருக்கும் மண்ணுள் இயற்கை அறிந்து, அழிவின்றிக் காக்காத உங்கள் அரசும், அறிவும், அண்டம் விட்டு அண்டம் பாய்ந்தும் என்ன? ஆய்ந்தும் என்ன?" என்கிறது அல்லவா!

ஊழி பெயர்தல் உண்டு என்பதை வள்ளுவர் அன்றே கூறினார். ஊழ், ஊழி என்பன ‘உலகியற்கை' என்றும் தெரிவித்தார்.

செயற்கை அறிந்தால் மட்டும் போதாது; உலகத்து இயற்கை அறிந்து செயாற்ற வேண்டுவது அறிவறிந்த அரசின் கடமை என்றும் கூறினார்.

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்”

என்பது அது.

ஊழிப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா? என்றும், ஊழிப்பெயர்ச்சியால் ஏற்படும் கேட்டை இல்லாமல் ஆக்கிவிட முடியுமா?" என்றும் வினவலாம்.

நிலநடுக்கம் நேரக்கூடும் என்பதை முன்னரே அறிந்து அறிஞர் அறிவித்தனர். அதனைப் போர்க்கால நடவடிக்கை போல் அரசு போற்றியிருந்தால் உயிரிழப்பை ஓரளவாவது குறைத்திருக்க முடியும்! நிகழ்ந்து முடிந்த பின்னர் அறிஞர்களைத் தூண்டி என்ன பயன்? முன்னுறக் காக்கும் கடமையை மேற் கொண்டிருந்தால், பின்னுற இவ்வளவு பெருங்கேடுகள் நிகழ்ந்திராவே!

பொருள் பறிக்கும் கலையாக இந்நாளில் தெருத்தோறும் திண்ணைதோறும் காணப்படும் கணியர் (சோதிடர்) எவரும் ஆங்கு இல்லாமல் கூண்டோடு ஒழிந்து போயினரா? அல்லது,