உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அவர்கள் பொய்க்கணியம் புதைகுழிக்குள் முன்னமே புதைந்து கொண்டதா? நாட்டழிவையும் எச்சரித்துணர்த்தாத கணியம் வீட்டழிவை உணர்த்திவிடும் என்பது எவ்வளவு வேடிக்கைச் செய்தி!

புயல், மழை, நிலநடுக்கம், எரிமலைக்கல், நிலச்சரிவு, இடி மின்னல் இன்னவையே ஊழ் என்பது வள்ளுவம். அதனைத் 'தலைவிதி' யாக்கி விட்ட உரைகளே, தலையைச் சுற்றி வட்ட மிடும் போது ஊழை வெல்லும் உரன் (ஊக்கமும், அறிவும்) உண்டாகுமா? உண்டாக வேண்டும் என்பதே உலக வள்ளுவம்! அதனை உலகுக்கு உணர்த்துவதே மராட்டிய மண்ணில் ஏற்பட்ட நிலஅதிர்வு!

“எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்"