உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. ரகி(தியாகி)யர் தேவை!

தாமரை மல்லிகை முல்லை போலும் நறுமணமலராம் திருக்குறளை நாம் நடைமுறைப்படுத்தி வாழ்வியலாகக் கொள்ளாமையால், அதனை மணமற்ற இயற்கை வனப்பற்ற தாட்பூ ஆக்கிவிட்டோம்.

மா, வாழை, பலாப் போலும் நறுஞ் சுவைத் தீங்கனி வகைகளைத் தரும் கனித்தோப்பாம் திருக்குறளை, நம் வாழ்வில் கொள்ளாமையால் அழகுச் செடி (குரோட்டன்சு) வகையுள் ஒன்றாக்கி விட்டோம். பார்வைச் செடியால் பழப்பயன் உண்டோ! வாழ்வியல் திருநூலை மனப்பாடம் செய்தற்கும் ஒப்பித்தற்கும் கட்டுரை - ஆய்வு மேற்கோள்களுக்கும் - கதைப் புனைவுக்கும், மட்டுமே ஆட்படுத்தி, நம் வளராக் குழந்தைத் தன்மையைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றோம்!

பாவலர்கள் தம் பாவிகங்களிலும், பாடல்களிலும் திருக்குறளைப் பலப்பலவாய் எடுத்தாண்டதைப் பாராட்டி மகிழ் கிறோம். ஆனால், அத்திருக்குறளைத் தாம் எடுத்துக் கொண்ட பாவிக (காப்பிய) நாயகர்க்குப் பொலிவுறுத்தும் அணி மணியாக ஆக்கப்பட்டதே அன்றி அவர்க்குப் புகழ் சேர்த்ததே அன்றி அஃதொரு வாழ்வு நூல் என்பதை நாட்டப், பயன்படுத்தப்பட வில்லை என்பதை எண்ணத் தவறிவிட்டோம். அப்பாவிக நாயகர்க்கே மீப்புகழ் சேர்த்துச் சூடிக் கழித்த மாலையாய்த் திருக்குறளை எறிந்துவிட்டோம் என்பதையும் எண்ணத் தவறி விட்டோம்.

திருக்குறள் பொது மறை எனப்படுவதால் போற்றப் படாமல் ஒழிந்தது. பிறபிற சமயத்தார், தம் கொள்கை வழிப் பட்டது என்று காட்டினரே அன்றித், தம் மறையாக ஏற்றுப் போற்றினார் அல்லர் என்னும் குறைக்கும் ஆட்பட்டது. ஆதலால் போலிப் பெருமைக்கு ஆயது அன்றிப் போற்றும் பெருமைக்கு உரியதாயிற்று இல்லை.

திருக்குறள் தமிழ் மறை எனப்படுவதால் அறங்கூறும் பிற தமிழ் நுல்களுள் இதுவும் ஒன்றென வேண்டுமானால்