உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

உள்நாட்டுச் செயலாக்க நடைமுறை, வெளிநாட்டுக்குப் பரப்பாக்க நடைமுறை. இவ்விரண்டும் உடனடியான கொடை முறையாதல் வேண்டும். எண்ணுவோம்; எண்ணியதைத் திண்ணமாய்ச் செய்ய முனைவோம்.

தொண்டு செய்ய விரும்புவோர்க்குத் துணை வாய்ப்பு இது கால் அரிதில்லை. ஏமாற்று, தன்னலம் ஊடாடாத தொண்டுக்குத் தட்டு இல்லை. தடை இல்லை! மாநில அரசு - நடுவண் அரசு -வெளி நாட்டு அறநிறுவனங்கள் உதவிகளையும் முறையோடு அணுகிப் பெற வாய்ப்பும் உண்டு. அத்தொகை முறையாக முழுவதாகத் தொண்டுக்கே பயன்படுத்தப்படுகிறதா? சுருட்டிச் சொந்தமாக்கப் பயன்படுகிறதா? சுற்றியிருப்பார் பங்கு போட்டுக் கொள்ள உள்ளதா? "கெட்டிக்காரன் பொய்யும் எட்டு நாள்” என்பது தமிழ்ப் பழமொழி! பட்டுக்குனியவும் பழிப்புக்கு ஆளாகவும் உயிரிரக்கத் தொண்டுதானா உலாவர வேண்டும்! தொண்டன் என்பான் தொண்டுக்குப் பழியுண்டாக்க எண்ணவும் மாட்டான். எவன் தொண்டன் என்பதை மீண்டும் காண்க. இது கால் தொண்டுக்கு முட்டுப்பாடு என்பது ஈகரைத் தேடிக்கண்டு கொள்வதே. கண்டு கொள்ளும் உலாவே குறள் வளர்க்கும் உலாவாம்.

உள்ளம் உடைமை உடைமை! அவ்வுடைமை உடையார் எவராயின் என்ன? அவர் ஈகர்!

ஈகம் செய்வார் ஓரைவர் கூடிச்சேர்ந்தால் கைகூடாது என்றவை எல்லாம் கை விரல்கள் போல் கை கூடிவரும்!

66

'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.”

என்பது பொய்யாமொழி.