உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

135

நிலம்; நிலமே, நிலை நிலைபேறு நிலையம் நிலைப்பு எல்லாம் ஆகலின் மண்ணை மறந்த ஆய்வு மாற்று ஆய்வு மயக்க ஆய்வு.

மண்ணின் மைந்தர் மண்ணின் இயலும், மண்ணின் மொழியும் மண்ணின் மாந்தர் நலமும் ஒருங்கே கருதிச் சிந்திக்க வேண்டும்; செயலாற்றவும் வேண்டும்! இல்லாக்கால் பொல்லாத் தீதாய் முடியும்; பொருந்தாச் செயலாய்ப் போயொழியும்!

நம் பண்பாடு நம் நாகரிகம் நம்மொழி நம் அறிவு என்பவற்றை நம் மண்ணின் மணத்தொடும் எண்ணாமல், பிறபிற மண்ணின் மணத்தொடும், மனத்தொடும் எண்ணல் ஒரு பெரும் மாறாத் தீமையாய் இந்நாள் மல்கி வருதல் கண்கூடு. அதுவும் அறிவறிந்தும், பதவி செறிந்தும் உள்ளவரிடம் பெருகி வருதல் பெருங்கேடாய் முடியும்.

நம் மொழியின் எழுத்து வடிவத்தை, நம் மரபு, நம்நோக்கு, நம் இயல் செயல் இவற்றொடு நோக்கிப் பாராமல், இம்மொழி இவ்வெழுத்து எனப் பிறபிற எடுத்துக் காட்டித் திருத்த நினைத்தல் நோக்களவிலேயே மாறுபாடுடையதாம். திருத்தம் என்பது உள்ளது கெடுத்தல் அன்று. நலப்பாடு ஆக்குவதே திருத்தமாம்.

நம் மண்ணின் பொருள்கள், நம் உடல், குடல் எண்ணம் என்பவற்றொடு ஒட்டி உறவானவை. ஒத்தும் ஒன்றாகியும் அப்பார்வை இல்லாத அயன்மைப் பார்வை அவற்றின் நல் இயல்பை அழித்து இரண்டும் கெட்ட ஒரு பார்வையாய் அமைந்து விடும்.

தமிழில் கலைச்சொல் இல்லை, அறிவியல் இல்லை, பொருளியல் இல்லை என இல்லைப் பாட்டு இசைப்பெல்லாம் மொழியியல் அறியாப் பார்வையின் விளைவாம்.

ஆங்கிலத்திற்கு இத்தகுதிகள் எல்லாம் உண்டு என்று பறையறைகின்றனரே, அவர்கள் நான்கு நூற்றாண்டுகளின் முன்னர் இத்தகுதிகள் ஆங்கிலத்திற்கு இருந்தது என்பதை உறுதி செய்வாரா? ஆங்கில நாட்டு ஆட்சி, கல்வி மொழியே ஆங்கில மாகவா இருந்தது!

ஆங்கிலவர் விழித்தனர்! ஆங்கிலம் விழிப்புற்றது! ஆங்கிலம் வீறி எழுந்தது! விரிகதிர் பரப்பியது! தமிழர் விழித்தால் தமிழ் விழிப்புறும், தமிழும் வீறி எழும், விரிசுடர் பரப்பும்!

ஆனால் நிலைமை என்ன, மொழிப் பற்றும் இல்லை! மொழி அறிவும் இல்லை! முழக்கம் என்ன முழக்கம்? தமிழில்