உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அறிவியல் இல்லை! கலையில் இல்லை! என்னும் இல்லாமைப் பாட்டு!

ல்லை ல்லை

உன்னிடம் இல்லை! அதனால் உன்மொழியிடம் இல்லை! உன்னால் முடிந்தால் உன் மொழியாலும் முடியும். உன்னால் முடியவில்லை. அதனால் உன் மொழியால் முடியவில்லை.

நீ மொழியறிவு பெற்றிருந்தால், மொழிப்பற்று உற்றிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? உன் மொழியில் சிந்தித்து உன் மொழியில் வரைந்து உன் படைப்பை உலக வைப்பாய் ஆக்கியிருந்தால் உன் மொழி, உலகவர் பார்வையை எட்டும்! நீ என்ன செய்கிறாய்? ஆங்கிலம் கொழுத்த மொழி என்று வானளாவக் கூறி உன் உழைப்பையும் அதற்கே ஆக்கி அதனை மேலும் கொழுக்க வைக்கக் கடமை புரிகிறாய்! அதே பொழுதில் தமிழில் அறிவியல் இல்லை! கலைகள் இல்லை! என எள்ளல் நகைப்பும் இழிந்த கண்ணடிப்பும் செய்து உனக்குள் கிளுகிளுக்கிறாய்!

இப்பொழுது வேண்டுவது ஒன்றே ஒன்று - அது மண்ணின் மணத்தொடு சிந்திப்பது! மண்ணின் மணத்தொடு சிந்தனை கிளர்ந்து விட்டதா? கிளர்ந்து விட்டால் அறிவியலும் கலையியலும், கல்லார் நெஞ்சிலும் கல்விப் பொருளாக ஆகிவிடும்! அதற்குக் கல்வி வல்லோர் தம் நலம் கருதாமல் மண்ணின் நலம் கருதும் மன விரிவு கொள்ளல் வேண்டும்.

வள்ளுவர் மண்ணின் மணத்தொடு சிந்தித்தார். மண்ணின் இயல்பு கெடாமல் கட்டுக் குலையாமல் இருக்கச் சிந்தித்தார். அச்சிந்திப்பு மண்ணின் நலமாவதுடன் உலக நலமும் உயிர்களின் நலமும், பேராப் பெரு நலமும் கொள்ளத்தக்கதாய் அமைந்தது.