உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

66

இளங்குமரனார் தமிழ்வளம் 40

-

தானமிழ்தம் என்றுணரற் பாற்று"

(11)

வானின் றுலகம் வழங்கி வருதலால்

என வான் சிறப்பைத் தேன் சிறப்பு ஆக்குகிறார் அவர்.

அவ்வானமிழ்தே மண்ணமுதாம், புற்பூண்டு செடி கொடி மரம் ன்னவற்றை வளர்த்து வளமாக்கி உயிரினத்தை யெல்லாம் ஊட்டி வளர்க்கும் தாய் என்பதை

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

(16)

என்றார்.

பசும்புல் தலைகாண்பு அரிது"

வித்து,

வான் அமிழ்து என ஒன்றாகக் கூறப்பட்டாலும், அது தானும் அமிழ்தாகி மற்றைக் காய்கனி கிழங்கு கீரை, வேர், தவசம் இன்ன அமிழ்துகளையெல்லாம் தரும் அமிழ்துமாகித் திகழ்கின்றது என்பதைத்

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை’

என்பதால் தெளிவு செய்கின்றார்.

(12)

வாழ்வுக்கு உதவும் அமுது, உயிர்க் கொடையாய்த் திகழும் அமுது எனினும் அளவோடு பருகுக. அளவோடு அருந்துக. அற்றபின் துய்க்க என்று ஆணையிடுகிறார்.

"அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கு மாறு"

(943)

என்பது அது அமுதமே எனினும் அளவோடு நுகரவே வேண்டும் அதுவே நெடிய வாழ்வுக்கு வழி என்பதைக் காட்டுகிறார். நெடிய வாழ்வுக்கும் - நெஞ்ச நிறைவுக்கும் பெரிய தொடர்பு உண்டு.

ன்பம் உயிர்தளிக்கச் செய்யும். துன்பம் உயிரை ஒடுக்கிக் காண்டு வரும். அடித்துப் போடாமலே ஆளைக் கொன் றொழிப்பது நெடிய துயரமேயாம். கொல்லாமல் கொல்லும் தற்கொல்லி தாழாத் துயரமேயாம். ஆதலால் அத்துயர் நீக்கம் வேண்டத்தக்கவற்றுள் எல்லாம் வேண்டத்தக்கதேயாம்.

உயிரின் நோக்கம் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயாம். இவ்விரண்டும் ஒருங்கே மெய்யுறப் பெறும் இடம் எது? நோயாகவும், மருந்தாகவும் இருக்கும் ஒன்றே, இன்பிலே