உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.அறம்

"மன அறமே அறம்! அதுவே எல்லா அறங்களுக்கும் மூல அறம்; முதல் அறம்!" என்பது வள்ளுவ நோக்கு.

முதல் என்பது என்ன? கைம்முதல், வைப்புமுதல், உரிமை முதல்! இம்முதல், 'முதல் இலார்க்கு ஊதியம் இல்லை' என்பதில் வரும் முதல் (449)

முதல் என்பது முதன்மை, அம்முதல் அகரமுதலும் ஆதிமுதலும் போல்வது (1)

முதல் என்பது எண்; "வளி முதலா எண்ணிய மூன்று" என்பதில் வரும் முதல் (941)

முதல் என்பது வித்து, கிழக்கு, வேர் என்பன.

"வள்ளி முதல் அரிந்தற்று" என்பதில் வருவது அது (1304) இம் முதல் நாற்பொருள்பட்டு நயன்பெறுதல்" முதற் குறள் உவமை விளக்கச்" செய்தி (திரு. கு. கோதண்டபாணியார்):

மன அறமே எல்லா அறங்களின் மூலமும் முதலுமாம்! அஃது “அனைத்து அறன்” (34)

66

அந்த மன அறம் இல்லாமல் அமையும் அறங்கள் ‘ஆகுலநீர’ ‘ஆகுலம்” ஆகு+உலம்: ஆகு+ஆறு (477) (ஆகு+ஊழ் (371) போல்வது.

உலம் காய்தல், வற்றிப்போதல், வறண்டு போதல், கெட்டுப் போதல் ஆகியவற்றின் அடிச்சொல்.

=

ஆகு உலம் ஆக்கம் போல் தோன்றும்கேடு. அதனை அறிந்தார், ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார்

(463)

ஆகு உலம் என்பதன் பொருள் விளக்கம்,"ஆவது போலக் கெடும்” (283) “உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” (479) "ஆக்கம் போன்று இல்லை" (135) என்பவையாம்.