உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

40 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

மன அறம் இல்லாமல் சொல்லறமோ, செயலறமோ சீர்மை எய்தா! அடித்தளம் அமையாத முடித்தளம் என்னாம்? ஆட்டங் கொடுத்துக் கால் சாயாதிராதே!

மன

சொல்லறத்தையோ, செயலறத்தையோ சுட்டுதற்கு முற்பட அறத்தைத் திருவள்ளுவர் சுட்டியமை, "அவ்வறம் இல்லாமையால் இவ்வறங்கள் சிறவா" என்பதற்கேயாம்.

மன அறம் சீர்மையடையாமைக்கு அடிப்படை என்னை எனில், ஒரு தடை இல்லை-ஒன்றே ஓராயிரமாய்-ஒரு கோடியாய் கோடி கோடியாய் அமையும் தடை! அது ‘மன மாசு' எனப் படுவதாம்!

மன மாசுதான் உலகில் காணும் எல்லா மாசுகளுக்கும் அடிப்படையாவது. 'மாசுக் கட்டுப்பாடு' எனத் துறை தோன்றினாலும், நிறை கடமை புரிந்தாலும், தனித்தனி மனமாசு நீக்கம் இல்லாமல் எவ்விளைவையும் ஆக்காது!

கரட்டு நிலத்தைக் கார் நெல் விளை நிலமாக்க வேண்டு மானால், முழுதுறு பண்படுத்தம் வேண்டும் அல்லவா!

அழுக்குச் சுவரில் அழகோவியம் தீட்ட வேண்டுமானால், அழுக்கை அழித்துத் துடைக்காமல் ஆகுமா?

கண்ணிலே மாசு இருந்தால் பெருங்கவலை இல்லை! மாசு இருப்பானுக்கு அன்றிப் பிறர்க்கு அவ்வளவு கவலை இல்லை!

ஆனால், கருத்திலே மாசு இருந்தால் கொண்டவனுக்கு மட்டுமா தீமை; கண்ட கண்ட பேர்க்கெல்லாம் தீமை இல்லையா?

ஆதலால், உலகிலே பெரும் பெரும் கேடாக இருக்கும் காற்றுமாசு, நீர் மாசு, உணவு மாசு, மருந்து மாசு, உணர்வு மாசு, தன்னல மாசு, பொது நலம் போற்றா மாசு இன்னவை எல்லாம் மனமாசின் வெளிப்பாடுகள் தாமே!

மன மாசு நீங்கிவிட்டால், மற்றை மற்றை மாசுகள் நீங்கி விடும் அல்லவோ!

மனமாசு இல்லான் வாழைப்பழத் தோலை வழியில் எறியான்; வருவார் வழுக்கி வீழச் செய்யான். வழுக்கி வீழ்தலால் கால் கை ஒடித்து 'ஊனர்' ஆக்கிக் குடும்பஞ் சுமப்பானே குடும்பச் சுமையாகுமாறு செய்யான்!