உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

153

தீமையானவற்றை நினைத்தலும் ஆகாது என்றும் தோன்றும். அவன் மனச்சான்று, அவன் தவறிச் செல்லுங்கால் இடித்துக் கூறாது விடாதே!

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ,

மன்னுயிர்க்கு இன்னா செயல்”

என்பது மனச்சான்றின் குத்தல் அன்றோ!

“எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை

என்பது உறுதிகொண்ட முடிவாகி விடும் அன்றோ!

(318)

(317)

ன்சொல் ஒருவர் சொன்னால் தமக்கு இன்ப முண்டாகிறது என்பதை அறிந்து கொண்ட ஒருவர், பிறர் செவிக்கு இனிமை தராத சொல்லைச் சொல்வாரா? சொன்னால் மனச்சான்று குத்திக் குடையுமே! குடைய வேண்டுமே! வெளியே இருந்து குத்தும் கத்தியும் கணையும் செய்யும் கொடுமையினும் உள்ளிருத்து ஓயாது குத்தும் மனக்குத்தல் நொடிக்கு நொடித் தற்கொலை அன்றோ! ஆகவே;

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது'

என்றார்.

(99)

தாம் துயர்ப்படாமல், வன்சொல் கேளாமல் இருக்க வேண்டும் என்று நின்று நினைபவர். பிறர்க்கும் அந்நினைவு உண்டுதானே என்று உணர்வர்.

அந்நிலைக்கு மாறாகப் பிறர் தம்மிடம் நடத்தலை விரும்பாத அவர், பிறரிடம் தாமும் அந் நிலையில் நடவாதிருக்க நினைவர்; முனைவர்.

ஒருகால் அந்நிலைக்கு மாறாகத் தாம் இருக்க நேரின் தம் மனச் சான்றால் இடிக்கவும் குற்றவும் பட்டு நொடி நொடியும் நோவர்.அந்நோவு, மீண்டும் அந்நிலை ஒன்று தமக்கு வாராவாறு தற்காப்புச் செய்வர். இதனைத் திருவள்ளுவர்,

“எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று”

என்பார்.

(655)