உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

6. வீடும் உலகும்

"தன்னைத்தான் காதலன் ஆதல்” என்பதைக் கண்டோம். "தன்னைத் தான் காதலன் ஆதல் சிறுநோக்கு அன்றோ! குறுநோக்கு அன்றோ! தன்னலம் கெட்டுப் பிறநலம் பேணல் அறநெறி எனப்படுமே அல்லாமல் தன்னலப் பேணியா அறக் காவலன் ஆவான்?” என்னும் ஐயம் கிளைக்கும்.

தன்னைத்தான் காதலியான் பிறவிக்குப் பாழாய்ப் பிறர்க்குச் சுமையாய் ஆவான் எனின், தன்னைத்தான் காதலித்தல் (பணி கொண்டு நலமாக வாழ்தல்) பிறவிக்குப் பேறாய்ப், பிறர்க்குப் பாரம் இல்லானாய் இருக்க இயலும் அல்லவா!

ஒவ்வொருவரும் தன்னை நலமாகப் போற்றிக் கொண்டு, பிறர்க்குப் பாரம் இல்லாராய் வாழ்ந்தால் அவர் வாழ்வு மட்டுமா? வீட்டு வாழ்வும், நாட்டு வாழ்வும் சிறக்குமே! உலகுக்கும் ஒருமித்த நலமாகுமே!

ஒவ்வொருவரும் நலப் பாட்டில், தொழில் துறையில், பொருள் துறையில் அறிவியல் நிலையில் நன்றாக இருந்தால் உலக நலம் அது தானே! அதுதானே உலக நலத்தின் ஆணிவேர்! உலக இயக்கத்தின் அச்சாணி! தனித்தனி மாந்தர் நலம் பேணாக்கால் உலகுக்கு எப்படி நலமாம்.?

அன்றியும் தன்னைத்தான் காதலனாக இருந்தால், அவனால் உலகம் என்ன பயன் எய்தும் என்பதைக் கூற அல்லவோ, முச்சீரால், அதனைக் கூறி, அடுத்த நாற்சீரால் அப்பயன் பாட்டை விளக்கினார் பெருநாவலர். அது,

“தன்னைத்தான் காதலன் ஆயின், எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்'

என்பது.

(209)

தன் நலத்தை விரும்பிக் காக்கும்போதுதான், பிறரும், தம் நலத்தை விரும்பத்தானே செய்வர் என்றும், அவர்க்குத் தீமை செய்தல் ஆகாது என்றும், எவ்வொரு வகையாலும் அவர்க்குத்