உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

151

இயல்செயல்களையும் போற்றிக் காத்துக் கொள்க என அருளியுள்ளது.

66

'இப்பேதை மாந்தன் வருமுன்னர்க் காக்கும் அறிவு கொண்டிருந்தும் அவ்வறிவு இல்லாதவிலங்கு பறவை நீர்வாழி, சேற்று வாழியாகிய உயிர்களுக்கும் இழிந்து, தாழ்ந்து ஒற்றைக்கு இரண்டடையாய் வாய்த்த வளங்களையும், "அங்கணத்துள் கொட்டிய அமிழ்தம்" (720) போல ஆக்கிக் கெடுகின்றானே தனக்குக் கேடாய்ப் பிறர்க்குச் சுமையாய்ப் பிறவியைப் பாழாக்கு கின்றானே" என்னும் பெரும் பரிவால் திருவள்ளுவப் பெருந்தகை,

-

“தன்னைத் தான் காக்கின் சினங்காக்க’

“யாகவா ராயினும் நாகாக்க"

66

“காக்க பொருளா அடக்கத்தை”

"பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்” “கள்ளாமை காக்க தன் நெஞ்சு”

“குற்றமே காக்க’

66

“தற்காக்க”

(305)

(127)

(122)

(132)

(281)

(434)

(883)

என்று காக்க காக்க என்று காக்கச் சொல்லியவர், இச் சொல்வகை போதாதென எண்ணினார் போலும்' அதனால்,

உன்னை நீ காத்தால் போதாது,

"உன்னை நீ காதலி"

என்றார்!

மாந்தன் நிலை பெற்று, நிலம் நிலை பெயரினும் தான்நிலை பெயரா நிலையுறுவதற்கு வள்ளுவர் காட்டிய வாழ்வியல் பேறு

"தன்னைத் தான் காதலன்" ஆதல் என்பதாம் (209) இவ்வள்ளுவ நோக்கு எத்தகைய அடிமூலத்தில் இருந்து கிளர்ந்ததென எண்ணுக!

தன்னைத் தான் காதலால் பேணுக!