உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40 ஓ

நில்லாது இயங்கும் உலகத்தில், தன் புகழ், நிலைபெற நீடு வாழும் வாழ்வே வாழ்வு. அவ்வாழ்வு அடைதலே பிறவி நோக்கு!

அப்பிறவி நோக்கை உணர்ந்தார் என்ன செய்தல் வேண்டும்? தன்னைத் தான் காதலிக்க வேண்டும். விரும்பிப் போற்ற வேண்டும்! இல்லையானால் பிறவி நோக்க மறவி ஆவான் அவன்!

பிறவி நோக்கம் இயல்பாய் எளிமையாய் - நிறைவேற எண்ணிய இயற்கை இறைமை, பொறி புலன்களை இந் நோக்கத்திற்குத் தகவே அமைத்துளது.

கண்கள் இரண்டு!

காதுகள் இரண்டு!

கால்கள் இரண்டு!

கைகள் இரண்டு! - இவை வெளிப்படையானவை

மூக்குத் துளை இரண்டு!

நாவுகள் இரண்டு! உண்ணாக்காம், அண்ணாக்கு, நாக்கு

வாய்கள் இரண்டு! (மேல் வாய், கீழ் வாய்)

உதடுகள் இரண்டு! (மேலுதடு, கீழுதடு)

இமைகள் இரண்டு! (மேலிமை, கீழிமை) வெளியேறுற்றுவாய் இரண்டு! (நீர்வாய், மலவாய்) -

வை அகமும் புறமும் ஆனவை

மூளை இரண்டு! (பெரு மூளை, சிறு மூளை)

தொண்டைக் குழல் இரண்டு!

(உணவுக் குழல், காற்றுக் குழல்)

நுரையீரல் பகுதி இரண்டு! (வலப் பகுதி, இடப் பகுதி) குடல் இரண்டு! (பெருங்குடல், சிறுகுடல் (அ)

மணிக்குடல்)

சிறுநீரகம் இரண்டு! (வலப்பால், இடப்பால்) வித்து நிலை இரண்டு! (வலப்பால், இடப்பால்)

இவை அகமாய் அமைந்தவை

இவற்றுள் பல உறுப்புகள் - பகுதிகள்

- ஒன்றே இருந்தாலும் வாழமுடியும்.

ஆனாலும், இயற்கை இறைமை தன் பேரருட் பெருக்கால் ஒற்றைக்கு இரட்டையாய் வழங்கியுள்ளது! தன்னை உணர்ந்து, தன் பிறவிப்பேற்றை உணர்ந்து தன் பொறி புலன்களையும்