உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

அவன் என்றால், அவள் இல்லையா?

அவளுக்கும் அதுதான்.

இயற்கை இறைமை பேரருட் பெருக்கினது.

149

அதன் விந்தைமிகு ஆக்கங்கள் விரிக்கஇயலா விரிவினது. அதன் மாறுதல் இயற்கை, உலகை அருமையாய்ப் பேணிக் காப்பது!

அதன் தேய்மானச் சீராக்கம், பருவ

ஒத்தியைவு

ஆகியவை, நினைப்பார் நெஞ்சை உருக்கி; உருக்கி அதன் உயர்வை வணங்கி வழிபடச் செய்வன.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என விரல் மடக்கி எண்ணுவாரும் எண்ணிக் கொள்ளும் ஏற்றம் மிக்கன. ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக வளர்நிலை வாழ்வை அருள்வது இயற்கை ஒன்றின்மேல் ஒன்றாய் அறிவு பெருக்கமுற்று உலகியக்கம் இயலச் செய்வது அப்பேரியற்கை இறைமை.

அவ்வறிவுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பொறிகள் ஐந்தை அமைந்து கிடக்கச் செய்தது அவ்வியற்கை இறைமை (6) அப்பொறிகள் வழியே கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் (1101) புலத்திறம் ஓங்கச் செய்ததும் அவ்வியற்கை இறைமை

அப்பொறி புலன்கள் அளவில் நின்று விடாமல், மனன் உணர்வாம் உணர்வை உருவாக்கி உலகுய்யச் செயற்படுத்துவதும் அவ்வியற்கை இறைமை!

அவ்விறைமை பொறி, புல, மன இயக்கங்களைச் செய்யும் தனித்திறம் நோக்குவார் நோக்களவில் நின்றமையுமோ? “அறிதோறு அறியாமை" என்னும் அறிவியல் இலக்கணம் (1110), முற்றாக உலகம் உணர்ந்து, என்றென்றும் போற்ற அமைந்த விந்தை இயக்கம், பொறி, புல மன இயக்கங்கள் அல்லவோ! அவற்றின் வகை அறிந்தான் தானே உலகம் (27)

அவ்வாறு அறிந்தான் தானே, பூத உடலாலும் நீடு வாழ்ந்து (3,6,1312) புகழ் உடலால் உலகம் உள்ளவரை, உள்ளவனாகத் திகழ்வான்; உலகாகத் திகழ்வான். இல்லையானால், உலகத்தால் ஆவது தான் என்ன? அதனால் அவன் புகழை உலகம் என்றும் விடாது! அவன் புகழே, தன் புகழ்! “பனுவல் துணிவு” அது (21)