உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

5. உடல் நலம்

"அறத்தில் சிறந்தது மன அறம்: அதுவே மூல அறம்' என்பது மேலே விரிவாக்கப்பட்டது.

அவர்.

மன அறம் சிறக்கவும் ஒரு மூலம் உண்டு. அம்மூலம் யாது? “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்"

உயிர் அழிந்தால்,உளமாவது, உணர்வாவது உண்டா? உடல் கெட்டிருந்தால், உளங்கெட வேறு ஒன்று வேண்டா; அதுவே உளங்கெடுக்கப் போதுமே!

உளம் நன்றாக

வளமாக - இருக்க நினைப்பார் எவரோ

உடல் நன்றாக வளமாக இருக்கவும் நினைப்பார்!

பால் நன்றாக இருக்க வேண்டுமானால்,

பால் வைத்த கலமும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா!

இருக்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால்,

கடிப்பான்கள் அங்கே இருத்தல் ஆகாவல்லவா!

உடல்கெட்டால், உளக்கேடும் உண்டாம் என்பது

பொதுமை இயல்!

அதனை வென்றாரும் உளர்! அவர் அரியரினும் அரியர்! உடல் நலம் - தன் உடல் நலம் -போற்றல், ஒவ்வொரு மாந்தப் பிறப்புக்கும் தலைக் கடன்!

ஏன்?

தன்னுடல் கெடுப்பான் - பிறரை வாட்டுவான்; வதைப்பான்;

பிறர்க்குச் சுமையாவான்! குடும்பப் பாரத்தைத் தாங்க வேண்டிய அவன் குடும்பப் பாரமாவான்.