உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு (வரல் ஆறு)

வள்ளுவமும் வாழ்வியலும் என்பதன் பெயரே வள்ளுவத் திற்கும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை இனிது காட்டும். உலகவர் அனைவரும் நலமுற வாழவேண்டும் என்னும் நோக்கிலே அருளப்பட்டது வள்ளுவம் ஆகும்.

வள்ளுவத்தைத் கற்பார் தமக்கும், அதற்கும் உள்ள வாழ்வியல் தொடர்பை இனிது அறிவர். மேலும், எவ்வாறு வாழ்வியலை அமைத்துக் கொள்ளக் கூடும் என்பதைச் சிந்திக்கவும் தூண்டல் ஏற்படும்.

நல்ல தூண்டலின் பயன், அரிய துலங்கலேயாம். அவ்வகை யில் வாழ்வொடும், வரலாற்றொடும் கைகோர்த்து நடையிடும் இச்சுவடி 18 கட்டுரைகளையுடைது.

சுட்டிக்காட்டும் அளவில் ஏறத்தாழ நாற்பதின்மர்க்கு மேலும் உலகளாவிய பார்வையில் பெருமக்கள் இடம் பெற்றுள்ளனர்.

-

மேற்கோள் காட்டப்பட்ட அவர்களும் மேற்கோளாம் வள்ளுவமும் பலர் வாழ்வில் மேற்கொண்டொழுகச் செய்ய வல்லன என்னும் ஆர்வத்தால் வெளிப்படுவது இச்சுவடி.

குறளியத்தில் தொடர்ந்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் நூலுருப் பெற்றுப் பயனாற்ற உதவும் பெருமகனார் தவத்திரு. ஆத்மானந்த அடிகள் ஆவர்.

கருவூர் இராமகிருட்டிண நிலையத் தலைவரும், அன்னை சாரதா கல்லூரி நிறுவனரும், தாளாளரும் விவேகானந்தர் மாண்மண்டபம் படைத்தவரும் ஆகிய அவர்கள் வள்ளுவம், வாசகம். தாயுமானம் என்பவற்றின்மேல் அளப்பரும் பற்றாளர். திருவள்ளுவர் தவச்சாலைப் புரவலரும், அறங்காவலரும் ஆவர். அவர்தம் கொடைமையே இச்சுவடியாய்த் தமிழ் வளமாகத் திகழ்கின்றது. அடிகளார் அவர்களின் நயனார்ந்த பயன் கொடைக்கு நனிமிகு நன்றியன் 'இன்பமே சூழ்க' வாழிய

வையகம்!

அன்புடன், இரா.இளங்குமரன்