உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உலகு இயற்றியான்

திருக்குறளின் பிழிவு, “தமக்கென வாழாமை; பிறர்க்கென வாழ்தல்" என்பவை. இத்தன்மைகளை ஒருவர் கொள்வதற்கு முதல் நிலை, அன்பு! முடி நிலை அருள்!

அன்பு, இல்லறம்; வாழ்வியற் பயிற்சியின் தொடக்கமும் வளர்ச்சியுமாம் நிலை! அருள், துறவுநிலை; குடி நலன் காத்து, அதன்மேல் குமுகாய நலனாகவும், முழுதுலகு நலனாகவும். உயிரிகள் அனைத்தும் உய்யும் ஒருபெரு நெறியாகவும் உள்ளி நிறை நிலை!

'உயிர் நின்ற உடம்பு' என்பதன் பண்பியல் அடையாளம். அன்பு, ஆகலின், "அன்பின் வழியது உயிர்நிலை" என்பது திருக்குறள்.

அன்பு சிறக்கும் உடலமே உயிர்நிலை! அன்புடையார்க்கு அமைந்த அளவு கோல் பிறர் நலம் நாடல்;

அன்பிலார்க்கு அமைந்த அளவுகோள் தந்நலத்திலேயே

அடங்கல்!

66

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” - என்பது திருக்குறள்

அன்பிலார், தமக்கு வாய்த்த எல்லாவற்றையும் தமக் கென்றே கொண்டவர்.

அன்புடையார், தமக்குத் தம் பெற்றோரால் வாய்த்ததும், உயிர் விளக்கத்திற்கு இடமாக அமைந்ததும், உள்ளொளி எய்துதற்கு உறைவிடமாக அமைந்ததும், பொய்யாக ஒழியும் வாழ்வை மெய்யாக நிலை பெறுத்துவதற்கும் வாய்த்ததும் ஆகிய உடலையும் பிறர்க்கென வழங்குவர்!

உடலையே

வழங்கும் அவர் மற்றைப் பொருள்

களை வழங்கத் தயங்குவரோ?

அடுக்கிய கோடி சொத்து உடையாராயினும், “உம் உயிர் வேண்டுமா? உடைமை வேண்டுமா?" என்னும் ஓர் இடர்