உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

3

நேருங்கால், உடைமையை விடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்ளவே விரும்புதல் கண் கூடு!

உயிரைக் காத்தல் என்பது என்ன? உடலைப் போற்றுதல் தானே! உடல்போனால், உயிருக்கு வடிவு ஏது? வடிவு உண்டானால்.... அதன் பெயர் என்ன?

‘என்பு' என்பது 'எலும்பு' என்பும் வழங்கும் அன்பர் என்பானேன்? என்பே மாந்தர் நிமிர்ந்து நடக்க - நிமிர்ந்து வாழ அமைந்த கருவி!

குனிந்து நடக்கவும் குறுக்கே இயங்கவும் வேண்டாமல் நிமிர்வைத் தருவது என்பே! அவ்வென்பின் உயரமே உடலின் உயரம் எனின் அன்பின் உயரத்திற்கு அளவு என்ன?

-

வானின் உயர்ந்தது! மண்ணின் விரிந்தது! நிலத்தினும் பெரிது; நீரின் ஆழ்ந்தது அன்பே! அவ்வன்புப் பொருளைப் பெறுவதற்காக - அதனைப் பெற்றதன் பேற்றுக்காக என்பை விடுவது அருமையன்று என்பது அன்பின் வழியாம்!

-

வள்ளுவர் காலத்தினும் அறிவியல் வளம் இந்நாளில் மிகுதி. "அறிதோறு அறியாமை கண்டு" அறிவியல் வளர்ந்து வருதல் வெளிப்படை! இந்நிலையில் உள்ளம் விரிந்தோர் உடல், எத்தனை எத்தனை வகைகளில் பயன்படுகின்றது?

என்பு மட்டுமோ பயன்படுகின்றது? ஒருவரென்பே ஓரிடத்து ஓருறுப்புக்கு உரியது, வேறிடத்து வேறு உறுப்புக்குப் பயனா கின்றது! பிறர் என்பும் பிறர் பிறர்க்குப் பயனாகின்றது!

ஒருவர் கட்பாவை பிறிதொருவர் கட்பாவையாய்க் கண்பார்வையாய்க் - கனிகின்றது. இறந்த ஒருவரும் தம் கண்ணால், இன்னொருவர் உடல் வழியே உயிர் கொண்டு, ஒளிவளம் கொழிக்க உதவுகின்றது!

உயிர் தங்காது என்னும் நிலையில் அரத்தம் இழந்தோர்க்கு அதே இனத்து அரத்தம் உடைய ஒருவர் அதனை வழங்கின், போகும் உயிரை நிறுத்தி வைத்தவர் ஆகின்றார். இறந்தாரை எழுப்பிய இறைநிலை - தாய்நிலை - எய்திய மேலோர் ஆகி விடுகின்றார்!

G

சிறு நீரகக் கோளாறு பெருவரவாக உலகில் பெருகு கின்றது. இலக்கம்கொடுத்து வாங்கவும் உயிர்த் துடிப்போடு உலகம் முந்து நிற்கின்றது.