உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

அக்கொடைப் பொருள் உடையவர், கொடுக்க வேண்டுமே! அக்கொடைப் பேரன்பர்களின் வள்ளன்மை தானே பலப்பலரைக் குழிக்குள் போக வைக்காமல் கொலு வீற்றிருக்க வைக்கின்றது?

என்பும், பாவையும், அரத்தமும், சிறுநீரகமும் மட்டும் தாமா உடலுறுப்புகளில் பயன்படுகின்றன?

அறிஞர்கள் மூளை, ஆய்வுப் பொருளாகப் போற்றிக் காக்கப்பட்டு வருவது இல்லையா? வெட்டி வெட்டி ஆய்தற் கெனவே தம் உடலை ஆய்வுச் சாலைக்கு ஆவணமாக எழுதித் தந்தவர் இலரா? தருபவர் இலரா?

வாழும் நாளில் உடல் - பொருள் - உயிர் எல்லாம் உலகுக் கென்றே வாழ்ந்த பெருமக்கள், வாழ்வின் நிறைவிலும் உலகுக் கெனவே தம் உடலைத் தந்துள்ளனரே! இவரே அல்லரோ 'சாவா உடம்பினர்!'

கட்டழியா உடலர் (காய கற்பர்), நிலை வாழ்வர் (சிரஞ்சீவியர்) என்பவர்; "என்பும் பிறர்க்குரிய அன்பர்" என்பதன்றோ, இற்றை மெய்ம்மை நிலை!

வள்ளுவர் வாய்மொழி எத்தகு உயிர்ப்புடையது! மாந்தர் வளர வளரத் தன் பொருளால் வளர்ந்தது வளர்ந்து வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழும் வளப்பொருள் அன்றோ வள்ளுவர் வழங்கிய பொருள்! அப்பொருள் எழுத்தில் இல்லை! சொல்லில் ல்லை! வாழ்வில் திகழ வேண்டும்! ஏனெனில் வாழ்ந்த பெருமகனார் வாழ்வார்க்கு வழங்கிய வைப்பு அது.

திடும் விளைவால் இறந்தார் உடல் உறுப்புகளைச் சட்டத்தால் அரசுடைமையாக்கி வேண்டுவோர்க்கு வேண்டும் உறுப்பை வழங்குவதை வளர்ந்த நாடுகள் இக்காலத்து மேற் கொண்டுள்ளன. ஆனால், அதனை அன்பின் வழியிலே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிலைப்படக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.

அவர்தம் காலங் கடந்த பார்வைத் திறத்தைக் காலங் கடந்த இந்நாளிலேனும் தமிழ் வாழ்வினர் உணர்ந்து கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அஃதன்றோ வள்ளுவர் வழிபாடு!

“இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் நிரந்து

தருக உறுப்புத் தக”

எனப் புதுப்பாப் பாடிப் பூரிக்க வைக்கிறாரே வள்ளுவர்.