உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பொறியின்மை

திருக்குறள் பதின்கவனகர்

பெ.

ராமையனார் அணித்தே இருந்தார். அவர் காணுமிரு கண்ணையும் இழந்தவர். ஆனால் விழியுடையவர்களும் விழித்துத் திகைப்புறும் அளவில் திருக்குறளில் திறம் காட்டினார்.

குறளைச் சொன்னால், எண்ணைச் சொன்னார்; எண்ணைச் சொன்னால், குறளைச் சொன்னார்; ஒரு சொல்லைச் சொன்னால், அச்செல்வரும் குறள்களையும் அவற்றின் அவற்றின் எண்களையும் கூறினார்.

ஒருவர் இருவர் அல்லர்; பதின்மர் பெயர்கேட்டு, அவர்கள் தாம் தாம் நினைத்த குறளின் தனித்தனி ஒவ்வோர் எழுத்தாகக் கூற, இடையிடையே பிறர் பிறர் வினாவ அவற்றுக்கு விடைதர, இடையிடை மணியடிக்க, மலர் எறிய அவற்றைக் கணக்கிட, புதுப்பாப்புனைய, இலாடசங்கிலி போட, பெருங்கணக்குகள் நினைவில் போட எல்லாமும் ஒருங்கே வாங்கி அனைவரும் மகிழ்ந்து பாராட்ட, விடையிறுத்து வல்லாண்மை காட்டினார்.

விழியொளி இல்லாமை அவர்க்கு ஒரு பழியாகி விட

வில்லையே!

மாம்பழக் கவிச் சிங்க நாவலர் என்பார் பழனியில் இருந்தார். இரண்டாம் அகவையிலேயே, அம்மை நோயால் பார்வை இழந்தார். எனினும் பாடுதற்கரிய வண்ணப்பாடல்கள் பாடினார்! பொருள் காண்டற்கரிய மடக்குகள் பாடினார்! அவர் பெயரால் ஒரு திரட்டு நூல் வருமளவு பாடினார்!

'அந்தகக் கவி வீரராகவர்' பெயரிலேயே, அவர்தம் பார்வையிலாக் குறை வெளிப்படுகின்றதே! அவர் 'ஏடு ஆயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப்படித்த விரகன்; இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவி வீரராகவன்' என்று தம்மைக் குறிப்பிடுகின்றார். எவரோ கண்டதை, 'நீவிர் கண்டது இது எனப் பாடுவதைக் 'கண்டு வியப்பு' (கண்டதிசயம்) - பாடுதல் என்பர். அதில், தேர்ச்சி மிக்கவராகத் திகழ்ந்தார். பெரும் புலமைச் செல்வராக விளங்கினார். ஆதலால்,

2