உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"காணுமிரு கண்ணிழந்தும் கற்றகவி வீரர்சீர் கோணாத தென்னே குமரேசா”

என ஒரு வினாவை எழுப்பி, பேணுகின்ற

66

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என ஒரு பாவை விடையாகத் தந்தார், கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார்.

இனி, இரட்டையருள் ஒருவர் முடவர்; ஒருவர் குருடர்; அவர்கள் நாடெல்லாம் புலமையுலாக் கொண்ட புகழ்ப் பெருமக்கள்! கலம்பகம் பாடுதலில் இணையில்லார் எனப் பாராட்டப் பெற்றவர்கள்.

இருநூறுக்கு மேற்பட்ட அரிய நூல்களை இயற்றிய கருப்பக்கிளர் சு.வே. இராமசாமிப் புலவர் காளைப் பருவமுதலே அரைகுறையில்லாமல் முற்றாகச் செவிப்புலன் அற்றவர்.

தவத்திரு. மறைமலையடிகளாரின் தகவார்ந்த மாணவராகத் திகழ்ந்து அரிய நூல்கள் பலவற்றை ஆக்கிப் படைத்த புலமைச் செல்வர் இளவழகனாரும் நட்டகவை தொட்டு அந்நிலையரே!

கழகக் காலத்திலும் ஐயூர் முடவனார், முடத்தாமக் கண்ணியார், முடத்திருமாறனார், முடக்கொற்றனார், உறையூர்த் ஏணிச்சேரி முடமோசியார் எனப் புலமைச் செல்வர்கள் பலர் இருந்தமை தொகை நூல்களால் அறிய வருகின்றதாம்.

கிரேக்க நாட்டுக் தொல்பெரும் பாவலர் ஓர் ஆங்கிலப் பெரும் பாவலர் மிதனார் ஆகியோரும் பார்வையிலார் என்றே

பகர்வர்.

கையில்லாத ஒரு செல்வி தன் கால்களாலேயே ஊசி நூல்கொண்டு தைக்கிறாள்! கண்ணாடி பற்றிச் சீப்பு வைத்துத் தலைசீவி முடிக்கிறாள்; பொட்டு வைக்கிறாள்; பூ முடிக்கிறாள். தீப்பெட்டி எடுத்து அடுப்புப் பற்றவைத்துப் பால் சுட வைத்து ஆற்றிப் பருகுகிறாள்! இன்றும் கண்ணேரில் காணும் காட்சிகள்

வை!

இவ்வெல்லார் உடற்குறைகளையும் ஒருங்கே கொண்டவர் 'கெலன் கெல்லர்' என்பார்.