உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்”

(312)

155

என்றார். தன்னைத் தான் காதலித்தான், தனக்குத் தீமை செய்தானையும் காதலால் தழுவிக்கொண்டு கனிவு கூர்ந்து எடுத்துக்காட்டாக நிற்கும் நிலை இது!

இப்படி ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோன் வாழ்வே எடுத்துக் காட்டாகி, உலகாகி அனைத்து உயிருமாகி - உயரும் வாழ்வாம்! அவன் வாழ்வே, அவன் குடும்பத்தை எடுத்துக்காட்டாக்கி, ஊரை எடுத்துக்காட்டாக்கி, நாட்டை டுத்துக் காட்டாக்கி உலக எடுத்துக்காட்டாக இலங்குவதாம். இதனையே,

முதுமையிலும் இளமை வீறு தரும் வாழ்வு என்றும், மனவிை மக்களும் வினை செய்வாரும் உற்றார் உறவும் ஒருவருக்காக ஒருவர் வாழும் உவகை வாழ்வு என்றும், இத்தகும் ஊர்களில் வாழும் சான்றோர்களின்

சான்றாண்மைச் சீரால் அரசும் அறத்தின்

நிலைக்களமாகித் திகழும் என்றும்,

மண்ணுலகிலேயே

விண்ணுலக இன்பம் எய்தும் வாழ்வாகும் என்றும், வீடு பேற்று வாழ்வு என்பது அதுவே என்றும் பிசிராந்தையார் கண்டகாட்சியாக இலங்கிற்றாம்.

இவற்றால், வித்தில் இருந்து விளைவு காண்பது போல, வீட்டில் ஒரு தனியாளிடமிருந்து விரிந்து விரிந்து உலகமாகிச் சிறக்கும் செம்பொருள் பேராப் பெருநிலை வாழ்வே வள்ளுவ நோக்காகத் திகழ்ந்தது என்பது புலப்படும்.புலப்படவே, லையைக் கண்டு ஆயும் வெளிப்புற ஆய்வாக இல்லாமல் வேரைக் கண்டு ஆயும் அகப்புற அகழ்வு ஆய்வாவது வள்ளுவர் நோக்கு என்பது வெளிப்படு நுண்மையாய் விளங்கும்.