உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வேள்வி

அறநூல் அருளிய திருவள்ளுவர் தம் அறநூலில் 'வான்சிறப்பு' என்றோர் அதிகாரம், முதல் அதிகாரத்தை அடுத்தே வைத்தது ஏன்? முப்பால் ஒழுக்கத்திற்கு வான்சிறப்புக் கூற வேண்டுவ தென்ன? வான்சிறப்பு, அறப்பொருளா? பொருட் பொருளா? இன்பப்பொருளா? என வினவின், மறுமொழி என்ன?

திருவள்ளுவர் திருநோக்கு எவ்வொன்றையும் அடித்தளம் கண்டும் கொண்டும் ஆய்ந்து உறுதிப்படுத்துவதே என்பது தெளிவு. அவ்வகையில் மூலமுதலாக முப்பொருளுக்கு வாய்த்தது வானே (மழையே) என்று தேர்ந்தே வாழ்த்தை ஒட்டிய வாழ்த்தாக - சிறப்பு வாழ்த்தாக வைத்தார்.

வான் வறண்டால் உலகம் என்னாம்? உயிர்கள் என்னாம்?

66

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" (16)

என்பது திருவள்ளுவம்,

-

புல்லே முளையாது தலைகாட்டாது எனின், மற்றைப் பூண்டு, செடிகொடி மரம் பயிர் வகைகள் தாமா தலைகாட்டும்? ஓரறிவு உயிர்களே தோன்றித்துலங்கா எனின் ஈரறிவு முதலாம் உயிரிகள் வாழவோ வாய்க்கும்?

சுட்டெரிக்கும் எரியூடே எப்பயிர் - எவ்வுயிர் வாழும்? நிலத்திலும் நீரிலும் தோன்றும் உயிரிகள் நெருப்பிலே வாழவும் மாட்டா எனின், நெருப்பில் அவை பிறக்கவோ செய்யும்? புது மழை பொழிந்து பெரு வெள்ள நீர் கடலொடு கலக்காவிடின் கடலின் இயல்பும் கெட்டுவிடுமாமே? வான் நீர் வாராக்கால் கீழ்நீரும் ஓடும் நீரும் சுருங்கித் தானே போகும்? அந்நிலையில் கடல் நீரின் கடுப்பு மிகுந்து ஆங்கு வாழும் உயிர்களுக்கு அக்கடுப்புத் தாங்காமல் அழிவும் கலிப்பு இல்லாமையும் ஆகிவிடுமே! ஆதலால்