உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

“நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்”

(17)

157

என்றது வள்ளுவம். கடல் நீர் வளம் குன்றிய அளவில் நிற்குமோ? மழையில்லை என்றால் மண்ணின் நீர்மை கெடுதல் உறுதிதானே! மழை இல்லை எனின் உழவேது, விதைப்பு ஏது, விளைவு ஏது? இவையில்லாக்கால், தானமேது, தவமேது? இனி, இவ் வெல்லாமும் இல்லா மண்ணில் பூசையோ விழாவோ நிகழக் கூடுமா?

எல்லாமும் இல்லை என்பது தானே பொருள்?

பெய்யாமல் கெடுப்பது ஒன்றுதானா, மழையின் கேடு? அது பெய்து கெடுக்குங் கேட்டை எவரே அறியார்? ஆற்றங்கரையை அழிக்கும் ஆறு, ஊரே இருந்த தடம் இல்லாமல் அழிப்பது இல்லையா? ஏன் நாட்டையே விழுங்கி ஏப்பமிடும் நிலையும் இல்லாமலா போகின்றது?

மழை பெய்தலை விரும்பிக் கிடக்கும் உழவனும், மழை பெய்யும் போது ஓடிப்போய் ஒதுக்கிடம் காணவே துடிப்பான் அல்லவா!

மண்டை வெடிக்க, கால் பொடிக்க வைக்கும் கோடை வெயிலுக்கு ஓடிஒளியாத ஓட்டம், சடசட என்னும் நான்கு மழைத்துளிக்கு உண்டாகி விடுகின்றதே!

மழை பெய்தால் ஊரே ஒடுங்குகின்றது! வினையாம் செயலும் முடங்குகின்றது! அடை மழை பெய்தால் கேட்க வேண்டுமா?

66

அழுகை மூஞ்சிக்குத் திருமணமாம்! விடிய விடிய அடைமழையாம்”

எனப் பழமொழியே உண்டாயிற்று. ஏன்?

மழை பெய்தல் சொகின (சகுன)த் தடையாகவும், கண் மூடித்தனத்தால் கற்பிக்கவும் பட்டது.

மழையை மங்கல வாழ்த்தாகக் காட்டியது சிலப்பதிகாரம், கடவுள் வாழ்த்தாகக் காட்டிய பேறும் அதற்கு உண்டு. மழை 'இன்பம்' என ஒன்றற்கு மூன்று பாட்டுக் காட்டியது பெருந் தொகை. மழையின் பயனின்பத்தை ‘மழைத்தது' என அமிழ்து பாடிய பாவேந்தர் காட்டினார்.