உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

உடற்சுமை என்பதே ஒன்று இல்லான், அயற்சுமையென ஒன்று கொள்வானா?

பேராப் பெருநிலைக்கு ஆட்பட்டவன்

பேரும் நிலைகளில் பேரையோ வைக்க விழைவான்!

165

பற்றற்றான் அவன்! தற்பற்று அற்றான் ஆகிய அவனும், அதனை மேலும் மேலும் வலுவாக்கிக் கொள்ளத் தன்னினும் பற்றற்றானையே பற்றிக் கொள்வான்! (345-50)

வள்ளுவம் காட்டும் வளத்துறவு - உளத்துறவு!

அவ்வுளத் துறவே, வளத்துறவு!

இல்லாமையையே உள்ளதாய் ஆக்கம் உயர்துறவு!