உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று சொல்லவே ஆகின்றது.

"காம்பில மூழை போலக் (கணையில்லா அகப்பை போல) கருதிற்றே முகக்க மாட்டேன்

என்று அப்பரடிகள் அறைந்ததே நினைவில் எழுகின்றது. இயல்பான துறவு நாட்டம் எற்பட்டுவிட்டால்

இல்லாமையே உடைமையாகி விடும்! எத்துணை அரிய செய்தி இது!

எது?

'இல்லாமையே உடைமை ஆகும் நிலை” (344)

"வேண்டாமையே விழுச்செல்வம் ஆகும் நிலை” (363) மனத்துறவால் ஏற்படும் என்றால், அதனினும் பெரியது

மணவாத் துறவு மேற்கொண்டும் என்ன?

மணந்து துறவு மேற்கொண்டும் என்ன?

வீட்டுக்கு வெளியேறியும் என்ன?

காட்டுக்குக் குடிபுகுந்தும் என்ன?

எத்தனை எத்தனை கோலம் கொண்டும் என்ன?

எத்தனை எத்தனை கொள்கை பறைந்தும் என்ன?

மனத்துறவு கொள்ளார், கொண்ட பிற துறவுகள் எல்லாம் துறவுகள் அல்ல!

அத்துறவு வாய்த்தால்,

நான் என்பது என்ன?

எனது என்பது என்ன?

துயர் என்பது என்ன?

பிறப்பு என்பது என்ன?

விடு என்பது என்ன? டு

உலகியல் என்பது தான் என்ன?

அவன் உடம்பும் அவனுக்கு மிகை!