உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

163

இல்லை! அவற்றை அடக்கிக் காக்கும் பேருறுதி சிலர் சிலர்க்கே உள்ளது, இது வள்ளுவ வாய்மை.

"இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்; பலர் நோலா தவர்”

நோன்பு என்பது என்ன? உறுதிப்பாடு, வலிமை!

(270)

“யாகாவார் ஆயினும் ஆக! நாவேனும் காக்க" என்றாரே

நாவலர்!

அதனைக் காவாமல் தானே 'அதிரவரும் நோய்'க்கு ஆட்படல் உண்டு! யாம் 'இனியர்' (இனிப்பு நோயர்) என நோயால் மருந்துக்கும் ஊசிக்கும் வாழ்வார் உண்டு! நா காத்தல் சொல்லுக்கு மட்டுமில்லை; சுவைக்கும் ம் தான் என்று கொண்டிருந்தால் - கண்டிருந்தால்- இத்துயர் இல்லையே!

கல்லார்க்கு மட்டுமே வரும் நோயே இதுவா?

தெளிவு இல்லார்க்கு என்றே வரும் நோயே இதுவே? அறிவாற்றலும் ஆளுமைத் திறமும் உடைய எத்துணைப் பேர் 'இனிப்பர்' வகையில் உள்ளனர்? ஏன்,

நாகாக்க இயலவில்லை!

விளைவு என்ன?

நாளும் நாகாவாமை!

நாளும் மருந்தர் நிலை!

நடமாடும் மருந்தகமாவதா நம் பிறப்பின் நோக்கு?

66

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்"

என்று எல்லா உயிர்களின் பிறவி நோக்கும், போக்கும் என்று தொல்காப்பியர் ஆணையிட்டும் என்ன!

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு”

என்று வள்ளுவர் வல்லாங்கு சொல்லியும் என்ன?

(343)

ன்பமே

தெரியாதவர் இல்லை -தெரிந்தவரே தெளிந்தவரே

-

ஆட்படுதல்,