உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

மிகை ஊண் விட்டால், 'பகையூண்' இல்லையே!

விஞ்சிய செலவை விட்டால், ‘அஞ்சுதலும் கெஞ்சுதலும் வஞ்சித்தலும்' வேண்டாவே!

தேவையைச் சுருக்கச் சுருக்க இன்பமும், நலமும் தேடித் தேடி வருமே!

துறவு நெஞ்சம் எப்பொழுது வரவேண்டும்?

எல்லாம் இருக்கும் போதல்லவோ இது இது வேண்டா து இது தேவை இல்லை என எண்ணம் உண்டாதல்

வேண்டும்!

இல்லாமையால் கொள்ளும் துறவு நாட்டம், வலிய நாட்டமா? வாய்த்த நாட்டமா?

அப்படி இருந்தும் துறவாரும் உளரே! அவர் நிலையைக் கண்டு வள்ளுவர் நெஞ்சம் நல்குரவில் நலிவொடும் கூறியது.

"துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று"

என்பது அது.

(1050)

எல்லா வளமும் வாய்ப்பும், கொட்டியும் குவித்தும் கிடக்கும் போது, தேவையைச் சுருக்கி ‘எளிவந்த இறைமை' கொள்ளல் வேண்டும்! அப்படிக் கொண்டால் அத்துறவு செயற்கையாகத் தோன்றாமல், இயற்கையாகவே அமைந்து விடும் (342).

செய்குன்று, செய்குன்று தானே!

செங்கோடு, செங்கோடு தானே!

துறவு செயற்கையாகத் தோன்றாமல், இயற்கையாகத் திகழ வேண்டுமானால், எல்லாமும் உள்ள போதில் தள்ளுவ தள்ள வேண்டும்!

புத்தரைத் தூண்டியவர் எவர்? அவர் நெஞ்சம்! இளங்கோவைத் தூண்டியது எது? அவர் நெஞ்சம் இவர்கள் 'கோமுடிக்' குரியவர்கள் அல்லரோ! அவ்வாறு ஏன் பலரால் மேற்கொள்ள இயலவில்லை!

-

பொறி புலன்களை அடக்கிக் காக்கும் உறுதி பலர்பலர்க்கு