உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தற்காவல்

இல்லறம் துறவறம் என ஈரறங்கள் சொல்லப்படுவதுண்டு. ஆனால், 'மன' அறங்கண்ட வள்ளுவர் 'மண' அறத்தைப் பகுத்தாரா? இல்லை! இல்லறமே அவர்கண்டது! துறவு என்பது ஒரு நிலை! இல்லற மேல்நிலை! இன்பம் என்றால், எப்படியும் இன்பத்தைக் கொள்ளலாமா?

எதையும் இன்பம் எனக் கொள்ளலாமா?

66

“அறத்தான் வருவதே இன்பம்" என்றவர் வள்ளுவர். அறத்திற்கு மாறான புறம்பான வழிகளில் அடைவன எல்லாம், பெறுவன எல்லாம் 'இன்பம்' ஆகா என அற இன்பம் உரைத்தார் அவர். அவ்வற ன்பம் என்பதை, “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” (49) என்று வெளிப்படுத்தினார்.

இயல்பினால் அமைந்த இல்வாழ்வே எவ்வறத்தினும் தலையாம் அறம் என்பதை வலியுறுத்தினார். (46, 47, 48)

இல்வாழ்வை அறமாகக் கண்ட பொய்யாமொழியார்,

'துறவு' என்றோர் அதிகாரம் வைத்தார். அதில் மனையைத் துறக்கக் கூறினாரா? மனைவியைத் துறக்கக் கூறினாரா? மக்களைத் துறக்கக் கூறினாரா? பிற பிற வளங்களை வாய்ப்புகளைத் துறக்கத் கூறினாரா?

உள்ளத்தில் ஒளி செய்யும் உயர்துறவை அன்றி, அயலொரு துறவைக் கூறினாரா?

"எது எது வேண்டா என்று விலக்குகின்றோமோ

அதில் அதில் இருந்து நமக்குத் துன்பம் இல்லை"

என்கிறார். அவ்வாறானால் "துன்பம் தருவன எவை எவையோ, அவற்றை ஒழித்தால், அவற்றால் ஆகும் துன்பமில்லை” என்கிறார்.

புகைப்பதை விட்டால், 'புகைய' வேண்டாவே!

குடியை விட்டால், ‘குடி கெட' வேண்டாவே!