உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

ஒழுக்கமாய்த் தோன்றி, ஒழுக்கமாய் நடந்து, ஒழுக்கத்தைக் காத்து, ஒழுக்கத்தை வழிவழியாக வளர்ப்பதற்கு வானொழுக்கச் சிறப்பே அடி மூலம் என்பதால் இறைமையை அடுத்தே வைத்தார். வான் சிறப்பு வாய்த்துச் சிறக்க இயற்கையைப் பேணிக் காக்கும் ஈடிலா அறவேள்வியே வேள்வி என்றும், மற்றை மற்றைப் புலை கொலை வேள்விகள் வேள்விகள் ஆகா என்றும் அவை மழை பெய்விக்கமாட்டா என்றும் குறிப்பாக உணர்தினார்.

66

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று”

என்றும்,

"ஒன்றாக நல்லது கொல்லாமை" என்றும்,

66

(259)

"கொலைவினைஞர் ஆகிய மாக்கள் புலைவினைஞர்"

என்றும் மறுத்துக் கூறிய திருவள்ளுவர், அந்நெறியை அப்பாலுக்கு அப்பாலாய் அகற்றி,

“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன்’

என்றார்.

""

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்”

-

((87)

(88)

என்றும் அடுத்தே வைத்தார்! விருந்தே வேள்வி பசித்தீக்கு உணவளிப்பதே வேள்வி' என்று புரட்சிப் பார்வை பார்த்தார்!

பசித் தீ பற்றி எரிவார்க்கு, உணவருளும் வேள்வியை விடுத்து, வைத்ததை எல்லாம் எரித்தும் வயிற்றுத் தேவை வாழ்வுத் தேவை - அறியாத் தீயில் உண்டியும் நெய்யும் பெய்தும் ஆவதென்ன? எண்ணித் தெளிந்து மன்னுயிர் வாழ மனங் கொள்ளுக" என்பது, மாண்புமிகு வள்ளுவ ஒழுக்க வேள்வி நோக்காம்.