உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

அது செல்லும் நெறியும் வழியே!

159

நல் வழி, நீதி நெறி, நன்னெறி ஆகிய நூல்கள் அற நூல்கள் அல்லவோ!

அறத்தாறு, புறத்தாறு, ஒழுக்காறு, இழுக்காறு,

ஆகரறு, போகரறு ஆகிய ஆறுகள் வழிகள் தாமே! மேனின்று தூயதாய் ஒழுரும் அமிழ்த மழையே ஒழுக்கம்! அவ்வொழுக்கமே மண்ணின் ஒழுக்க மூலம்! ஒழுக்க நீரை

மாசு ஆக்காமை தலையாய ஒழுக்கம்! அவ்வொழுக்கமே உலகம் உய்யச் செய்யும் ஒப்புரவு ஒழுக்கம் என்பதை உலகுக்குக் காட்டவே,

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வரனின் றமையா தொழுக்கு”

(20)

என்றார். ஒழுக்கு என்பது வான் ஒழுக்கத்திற்கும், வாழ்வு, ஒழுக்கத்திற்கும் அமைந்த இரட்டுறல் (சிலேடை).

இதனை, ஒப்புரவறிதலில் தலைப்பாட்டாகக்,

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" (211)

என்றார்.

"இயற்கையைப் பேணிக்காத்து ஆளும் நல்லரசு வாய்த்தால் முறைமை சிறக்கும். மழை வளமும் விளைவு வளமும் மல்கும்" என்று செங்கோன்மையில் கூறினார்,

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு "

என்பது அது.

(545)

அன்பொத்த இன்பத்தில் திளைக்கும் இல்வாழ்க்கை வானம் பார்த்து நிற்கும் வளர் பயிர்க்கு மழை பொழிவது போன்றது என்பதை,

“வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி"

(1192)

என்றார்.