உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

167

துணைவி, துணைவன் என விரித்துக் கூறவில்லை ஏன்? அவளுக்கு அவன் துணை; அவனுக்கு அவள் துணை; துணை களுள் உயர்வு தாழ்வு இல்லை! இணைப் பொருளே உண்டு! என்பதே விளக்கம்.

"துறந்தார் பெருமை துணைக் கூறின்” (22)

“விருந்தின் துணைத் துணை” (87)

“பனைத்துணை, “தினைத் துணை” (104, 433, 1282)

துணையை ஒப்பளவுப் பொருளில் திருவள்ளுவரே

வழங்குவன இவை அல்லவா!

வாழ்க்கைத் துணை என்று

மனைவியைத்தானே

திருவள்ளுவர் சொல்கிறார் என்று மறுத்துரைக்க முந்துவார்

உண்டே!

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”

(41)

66

"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை"

(42)

என்றும் கூறினாரே! அவனைத்தானே இவ்விடங்களில் துணையாகக் கூறுகிறார். அது தாழ்வாகி விடுமா?

ஒருவருக்கு ஒருவர் (கணவனும் மனைவியும்) துணையாக (உதவியாக) வாழ்வதுதானே வாழ்வு! அவ்வாறு நலமமைந்த வாழ்வுதானே”,

<<

வாழ்வார்க்கு வானம் பயந்த வாழ்வு" (உழுவார்க்கு மழைபொழிந்த வாழ்வு) 1234.

உதவி என்பதும் துணையாவதே! "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” (70), நன்றியும் ஆவதே! “செய்யாமற் செய்த உதவி” (101).

'துணை' ஒப்புப் பொருள் ஆவதை அவள் அவனைத் தன் துணை என்று கூறுவதன் வழியாகத் திருவள்ளுவர் புலப் படுத்துகிறார்.

அது,

“பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்'

""