உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

6T GOTLIGI (1234).

இளங்குமரனார் தமிழ்வளம் – 40

"துன்பத்திற்கு யாரே துணையாவார்?" என்று தம் நெஞ்சத் துணையும் தம்மொடு நில்லாத நிலையில் விரும்பி நிற்பார்க்குத் தம்மினும் கூடத் தம் துணை உயர்வாகி விடுதல் கண்கூடாம். அது பால் கடந்த மேல் நிலைப் பாற்பட்டதாம்! அவனுக்கு, அவள் மேல்; அவளுக்கு, அவன் மேல்! அம்மேல் நிலை ஒன்றாகி உடனாகி நிற்கும் நிலை! ஈருயிரும் ஓருயிராம் நிலை! தானே அதுவாய், அதுவேதானாம் உயிர்க் காதல் நிலை! மாறிப் புகுதல் உண்டு. அது அன்புயிர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை! மாறிப் புகுந்து மகிழும் நிலை' அதுபெறும் இன்பும், துன்பும் தான் பெறும் இன்பு துன்பாய்த் திகழும் தாய்மைத் தெய்வத் தூய்மை நிலை!

உறங்கும் நிலையில் இருவராய் இருப்பினும் விழிக்கும் நிலையில் ஒருவருக்கொருவர் நெஞ்சத்தராகிவிடும் நேயப் பெருநிலை. அந்நிலையில் அவன் நினைவாக அவள் எழுதலும், அவள் நினைவாக அவன் எழுதலும் உயர்வு தாழ்வற்ற உயிர்ம்மைக் காட்சி! அவள், அந்நிலையில் அவனுக்குப் பெய்யெனப் பெய்யும் மழையாகிறாள். அவன், அவளுக்குப் பெய்யெனப் பெய்யும் மழையாகிறான். இவ் விரண்டற்ற ஒருமை நிலையே அவர்களை,

66

‘வீழ்வார்க்கு வீழ்வார்" (விரும்புவார்க்கு விரும்புவார்) ஆக்கி வைக்கின்றது. 'வீழ்வார்' என்னும் இரண்டுள்ளும் பால் பொதுமைதானே திகழ்கின்றது! "வீழ்வாளுக்கு வீழ்வான்” என்றோ, “விழ்வானுக்கு வீழ்வாள்" என்றோ சொல்லாத திட்பம் நனிநயம் மிக்கதாம்!

உடலால் ஆண் தோற்றம் ஆகலாம்; பெண்தோற்றம் ஆகலாம்!

உயிரால் ஆண் தோற்றம் பெண் தோற்றம் உண்டா? உயிர்க்குப் பால் வேறுபாடு இல்லை என்றால் உயிரொத்த காதல் வாழ்வில் உயர்வு தாழ்வு உண்டா? உண்டாகலாமா?

உண்டானால் உயிர் ஒத்த காதல் எனப்படுமா?

முப்பால்களிலும் பெண்ணின் பெருமை பேசியவர்

திருவள்ளுவர், (54, 907, 1137)

"