உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

169

தந்தையை ஓரிடத்தில் கூறியமைந்த திருவள்ளுவர் (67) தாயை நாலிடங்களில் நனி பெருஞ்சிறப்பாக நவின்றார் (69, 656, 923, 1047)

மனைவியைப் 'பொருள்' என்கிறாரே திருவள்ளுவர்! அது பெண்ணை இழிவுபடுத்துதல் இல்லையா என்பார்! அவர் ஓரப்பார்வையர். செல்வம், முத்து, மணி, வயிரம், பொன், தங்கம் என்றெல்லாம் பெயரிட்டுப் பெருமையுறப் பாராட்டும்

நாவாலேயே 'பொருள்' இழிவு என்கிறாரே!

"தம்பொருள் என்ப தம் மக்கள்” என்பதைப் படியாமல் பேசுகிறாரே! பொருட்டாக எண்ணப்படுதலே பொருள்வழியாக வருவது என்பதைப் புரிந்தும் புரியாமல் புகல்கிறாரே!

இன்னும் என்ன? பெருங்கனிவால். பெண்மையைப் பேணிக்காக்கும் காப்பே பிறனில் வழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் என்வவை என அறிதல் வேண்டும்.

"பிறன் கடை நின்றான் அறன்கடை நின்றான்” பெண்மைப் பழிப்பா?

து

இல்வாழ்விலோ இன்பப் பாலிலோ இடம் பெறாதவை பெண்வழிச் சேறலும் வரைவின் மகளிரும். கள், என்பவற்றின் முன்னுள்ளவை.

சூது

அவள், மனப் பெண்டும் அல்லள்! மணப்பெண்டும் அல்லள்! ஆண் கயமைப் பிறவியன்ன, பெண்கயமைப் பிறவியர். வரைவு என்பது கட்டு; கட்டுப்பாடு; கட்டொழுங்கு; எல்லை; இவற்றை இல்லாப் பிறவியர் வரைவின் மகளிர் எனப்பட்டார். அவரை எடுத்துக்காட்டாக்கி வாழ்தல் கூடாது என்பாராய், எடுத்துக்காட்டாகக் கொள்ளத் தக்காரை,

‘ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு"

(974)

என நல்லுரை நவின்றார் நாவலர். கட்டமைந்து ஒரு முகப்பட்ட பெண்போல நீயும் உன்னைக் காத்துக் கொண்டால், உனக்கும் பெருமை உண்டு என்று பேசிய பெருமை நிலைக்களம் அது.

புதுமைப்பெண் என்னும் பாரதியியமும்,

“குறளோவியம் குடும்ப விளக்கு” என்னும் பாவேந்தரியமும், “பெண்ணின் பெருமை" என்னும் திரு.வி.க. இயமும்