உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.பிறப்பொப்பு

“ஊன் உடம்பு ஆலயம்"

என மந்திர மொழி மொழிந்த மண் இம்மண்! "ஊன் உடம்பு" உடையவை இயங்கு உயிர்கள்!

இவையெல்லாம் ஆலயம் என்ற மண்ணில் பிறப்பு வேற்றுமை

புகுந்தது!

நிலை உயிராம் மரம் செடி கொடியும், தெய்வத் திருக்கோயிலாக் கண்டதும் இம் மண்! ஆம்! நிலைத்திணை யுயிர்களிலும் 'இறைமை' உண்டு எனக் கண்டது அது!

அம்மட்டோ? அருவியும் ஆறும், ஏரியும் குளமும், காலும் கடலும் கல்லும் மண்ணும் பொன்னும் பொருளும், இறையுறை யுளாகவும் 'இறை' யாகவும் கண்டதும் இம்மண்!

மழை வழிபாடு தானே, மாரி, காளி வழிபாடுகள்!

வான் சிறப்பென்னும் தேன்சிறப்பு இறைமைக் காட்சி யல்லவோ!

சுடரும் கதிரும், குளிரும் மதியும், ஒளிரும் தீயும் 'ஒளி' வடிவ இறைமைக் காட்சி தானே!

உருவிலா அருவாய் உள்ளகம் தளிர்ப்புறுத்தும் ‘வளி’ யையும், அதன் மேலாம் பாழ் 'வெளி' யையும் இறைமை எனக் கண்ட மண் என்பதன் பிழிசாறுதானே ஊனுடம்பு ஆலயம் என்னும் ஒப்பரிய மொழி.

அவ்வூனுடம்பில் அரியதாம் மாந்தப் பிறவியை, "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்னும் பாட்டி மொழி பகருமே! அம்மானுடப் பிறப்பையும் பிரித்து, உயர்வு தாழ்வு கற்பித்தும், அத் திருக் கோயிலாம் ஊனுடம்பு, திருக்கோயிலுள் நுழைதல் ஆகாது என விதித்தும், அக்கோயிற் கொடையாக ஊனுடம்புகளை அலற அலறத் துடிக்கவும் குருதி ஆறாக வடிக்கவும் பலியூட்டும் பழியூட்டும், இம்மண்ணில் கால்

காவாக

-