உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

40 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

-

கொண்டதே! பிறப்பிலே உயர்வு தாழ்வு மேல்கீழ் பகுப்பு அறத்திற்கோ அறிவுக்கோ அடாச் செயல் என்பது வெளிப்படத் தெரிந்தும், இன்றும் கூட உணராமலும் ஒப்பாமலும் மரத்துப் போயவர் உள்ளனரே! உரைப்பவர் உள்ளனரே! தாளம் போடு பவரும் தறிகெட்டு ஆடுபவரும் காணப்படுகின்றனரே! இக் கொடுமை இன்றா கிளர்ந்தது? புதிய நோயா இது?

பழைமையில் பழைமையாய்ப் புகுந்து வாழும் நச்சு நோய் அல்லவோ! அந் நச்சு நோயின் நுண்ணுயிரி பரப்பப்படும் போதே, பரவி வரும் போதே,

66

"இளைதாக முள் மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து”

(879)

என எச்சரிக்கை விடுத்திருந்தும், விழிப்புறச் செய்து பழிப்பற வாழ முழங்கியிருந்தும், கண்மூடியாகக் கிடந்து மண்மூடிப் போயொழிந்தனரே! அதன் கேடு, ஆயிரம் ஆயிரம் கேடாய்ச் சாதிமைப் புற்றாய், ஆடு மாட்டுப் பலியூட்டினும் ஏடு கொள்ளா இழி கொலைகளுக்கும், தீயூட்டுகளுக்கும், கொள்ளைகளுக்கும் ஆளாக்கி வருகின்றதே! ஆறாம் அறிவுக்கு ஏறிய பிறவி, எண்ணிப் பார்க்க வேண்டாவா? அவ் வறிவுப் பிறவியை மூளைச் சலவை செய்து முட்டிக்கொள்ள வைத்த முன்னைத் தன்னல மூளைப் பிறவியரையும், இந் நாளைக் கட்சி அரசியல் கயமைப் பிறவிய ரையும் ஒருங்கே காறித் துப்பியும், கழிசடையர் என ஒதுக்கியும் வாழ ஆறாம் அறிவுடையார்க் கேனும் திறனும் தெளிவும் தேர்ச்சியும் இல்லையா? கண்ணாரக் கண்டும் கல்லாய் இரும்பாய்க் கடு நஞ்சாய்க் கற்றவர் நெஞ்சம் இருக்க வேண்டுமா? "கல்லேனும் ஒரு காலத்துருகும்” என்று கரைந்தாரே தாயுமானவர்!” கல்லார் மிக நல்லார் என்பதைக் காட்டுதற்கா கற்றோர் கல்வி பயன்பட வேண்டும்?

அழிப்பாரும் ஒழிப்பாரும் கல்லாரும் கற்றாரும் என்றால், தூண்டியும் ஏவியும்விட்டு ஊனுடம்பு ஆலயத்தை உருக்குலைத்து உலையும் வைப்பார், கல்விச் செருக்கரும், கற்றோர் படையைக் கைந் நொடிப்பினும் கண்ணிமைப்பினும் கொண்டிருப்பவரும் தாமே!

தொல்காப்பியர் நாளிலேயே, வடமொழியும் வடமொழி வழக்காறும் புகுந்தது. அறிவறிந்த அவர் அரண் வகுத்தார்.