உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

179

செல்வம், பதவி, கல்வி என்பவற்றில் ஒருவன் உயர்ந் திருப்பினும் உயர் ஒழுக்கம் இல்லான் நற்குடியாளன் அல்லன் என்பது வள்ளுவ உறுதிப்பாடு!

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்”

(973)

என்பது காண்க. மேல் கீழ் சாதிப் பகுப்பன்று; ஒழுக்கப் பகுப்பு. "இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்”

எனக் கொடையால் உயர்வு தாழ்வு காணலும் காட்டலும் வள்ளுவ நோக்காகாது! கொள்ளையடித்தும் கொடுக்கலாமே! அவன் உயர் குலமாய்க் கொடிகட்டிப் பறக்கலாமே!

“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” (972) “ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்" (214) “பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (134) உலகம் உய்ய ஒரு வழி,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்னும் பெருநெறி. அது பெரு நாவலர் பெருநோக்கில் கிளர்ந்த பொது நெறி நோக்கு.