உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தொழிலொப்பு

பிறப்பு ஒக்கும் என்ற பெருநோக்குக் கண்டோம்.

அவர் 'சிறப்பு ஒவ்வா' என்றாரே ஏன்? அச் சிறப்பு ஒவ்வாமைக்குக் காரணமும் அவரே காட்டினாரே,”

க்

செய்தொழில் வேற்றுமை" என்று.

அவ்வாறானால் புகழ்த் தொழில், பழித் தொழில் எனத் தொழில்களுள் உண்டா? பண்புகளுள், உயர்பண்பு இழிபண்பு என உண்டேயன்றிச் செய் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை. அதில் உயர்வு தாழ்வு காணலும் காட்டலும் தெளிவிலாத் தன்மை!

செய்தொழில் வேற்றுமை என்பதைத் தெளிவாக்க

வேண்டுமா?

'தொழில் செய் வேற்றுமை என மாற்றிப் பார்க்கலாமே!'

தவம் செய்வார் எவர்? தம் கருமம் செய்வார் என்பதை வள்ளுவர், "தவம் செய்வார் தம்கருமம் செய்வார்" என்று கூறவில்லையா?

அதனைத் “தம் கருமம் செய்வார், தவம் செய்வார்” எனின் தெள்ளத் தெளிவாகி விடுகின்றது அல்லவோ! அப்படியே தொழில் செய் வேற்றுமை என்பதும் அமைவுற்றதாம்!

மருத்துவப்பணி உயர்பணியே! ஓருயிரின் துடிப்பை மற்றோர் உயிர் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடிப் போய் உதவும் உளப்பாங்கே மருத்துவம்! இத்தகையரை எண்ணி, விரல்விட உடனே முடிகின்றதா? ஒன்று, இரண்டு எனக் கூட எண்ண முடியுமா? ஆனால் அத்தகையர் இல்லவே இல்லை எனச் சான்றோடு சொல்லிவிட முடியுமா?

ஆசிரியத் தொழிலின் சிறப்பென்ன? “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன்”

என்பதனினும் ஆசிரியனுக்குச் சிறப்பு உண்டா? பெற்றோரினும் பெருமையும், கடவுளைப் போன்ற சிறப்பும்