உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

181

உடையன் ஆசிரியன் எனின், அனைவரும் அதற்குத் தக்கார் தாமா?

'ஆடு மாடு மேய்க்கத் தக்கவன்; காவல் துறையில் சேர்ந்திருக்க வேண்டியவன்; பட்டாளத்திற்கு ஏற்ற ஆள்; வாணிகன்; வட்டிக் கடைக்காரன்" என்றெல்லாம் ஏசவும் பேசவும் படும் ஆசிரியர்கள் எல்லாம், செய்தொழிலைப் பழிப்புக்கு ஆக்கியவர் இல்லையா? அவர்கள் இழிமை, அவர்கள் செய்தொழில் இழிமையாகி விடவில்லையா?

ஆடு மாடு மேய்த்தல் இழிமையா?

திருமூலர் செய் தொழில் என நாம் அறிந்ததென்ன? ஆனாயர் என்பார், ஆநேயர் அல்லரோ?

கண்ணன் தொழிற் சிறப்பு ஆயன் என்பதல்லவா?

கிறித்து பெருமான், 'மேய்ப்பர்' எனப் படுகின்றாரே!

நபிகள் நாயகம், வாணிகர் தாமே! வாணிகம் இழிந்ததாகி விடுமா? வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேணல் என்றல்லவோ சொல்கிறார் திருவள்ளுவர். அவர்களை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்கிறாரே கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப் பாலை);

வணிகக் குடும்பத்தில் பிறந்து வணிகத்தாலேயே பொருளீட்டி வையகப் புகழ் பெற்ற அறவோர்கள் வரலாறு உலகம் அறியாததா?

-

காந்தியடிகளார் வாணிகக் குடும்பத்தில் தோன்றியவர் தாமே! கயமையும் சூழ்ச்சியும் மிக்கது அரசியல் எனப் பழிக்கப் படும் 'கட்சி அரசியலில் நின்றும் அறவோராக இன்னா செய்யாமைக்கு எடுத்துக் காட்டாளராகத் திகழ்ந்தாரே! எத்தொழில் இழிந்தது? எத்தொழில் உயர்ந்தது? தொழில் செய்யும் பாங்கே இழிமையும் புகழும் அன்றித் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லையாம்!

"கோயில் பூசை செய்வோர் சிலையினைக் கொண்டு" விற்கும் கொள்ளையர் எனப்பட்டனரே நாட்டியற் பாவலர் பாரதியாரால்.

"வேலோடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு" என வேந்தன் பழிக்கப் பட்டானே வள்ளுவரால்!