உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

பெருந்தக்க ஓவியன் கை, பிறந்த மேனிப் படங்களை வரைந்து வைத்துக் காசு பறித்தற்கு முனையுமா? முனையின், ஓவியன் குற்றமா? ஓவியக் கலையின் குற்றமா?

பூசை செய்தலும் ஆட்சி புரிதலும் கலைக் கூடமாக்கலும் இழிந்தவையா? இழிந்தவன் செயலால், தொழில் இழிவுக்கு ஆட்பட்டது என்பது தானே உண்மை.

தோ! செருப்புத் தைத்தவர் கோடி கோடிப் பேர்களின் பாலை வாழ்வைப் பசுஞ்சோலை ஆக்கியதை வரலாற்றில் காண்கிறோமே!

சவப்பெட்டி செய்த தொழிலாளி நிறவேற்றுமை எம் மண்ணில் இருத்தல் கொடுமையினும் கொடுமை! மாற்றியே தீர்வேன் எனத் தம் இனமே முற்றாக எதிர்த்தும் முனைந்து நிறைவேற்றி, அதனாலேயே மூச்சையும் முடித்தாரே? தையலும் தச்சும் இழிந்தவையா? அத் தொழில் செய்தமை இழிவுக்கா ஆட்படுத்திற்று?

தொழிலில் உயர்வும் இல்லை! தொழிலில் தாழ்வும் இல்லை!

தொழில் தொழில் தான்! தொழத் தக்கது தான்!

தொழிலைச் செய்யும் வகையாலேயே சிறப்பும் உண்டு! பழியும் உண்டு!

காந்தியடிகட்கு வெள்ளை நிறத்தவர் ஆப்பிரிக்க மண்ணில் செய்த கொடுமையை உணர்ந்த வெள்ளையர் ஒருவர், 'வெள்ளை இனத்தையே முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கத் தக்க செயலைச் செய்தது' என்று மதிப்பிடுகிறாரே!

ஆனால், ஆல்பிரட் சுவைட்சரையோ, அன்னை திரேசா அவர்களையோ ஒதுக்கி விட முடியுமா? ஒதுக்கினால் சேவையை அல்லது தொண்டை அல்லவோ ஒதுக்குகிறோம்!

"வணிகம் செய்யவோ, தொழில் தொடங்கவோ என்னிடம் மூலதனம் இல்லை! அதனால் தொண்டனாகி விட்டேன்! தொண்டு நிறுவனம் தொடங்கி விட்டேன்; நான் தொடங்கி நான்கு ஐந்து ஆண்டுகள் தான் ஆகின்றன! என் நிறுவனம் அடையாற்று ஆலமரமென விரிந்து விட்டது! எம் நாட்டு அரசுக் கொடை செல்வர் கொடை வெளிநாட்டுக் கொடை