உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பொருட் பயன்

பொருளின் இயல்பைத் தெளிவுற ஆய்ந்து தேர்ந்து உரைத்தவர் திருவள்ளுவர்.

"பொருட்டாக எண்ணத்தக்கவை இல்லாரையும், பொருட்டாக எண்ண வைப்பது பொருளே” என்றார்.

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகியல் வாழ்வின்பம் இல்லை”என்றார்.

"செல்வம் இருந்தால் சிறப்பும் சேர்ந்திருக்கும்" என்றார் அவர். பொருட்செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே எனப் பிறப்புக் கொள்கைச் சமயங்கள் பேசுவதைக் கேட்டார்; எழுதியதை அறிந்தார். விளக்கம் தந்து மெய்ப்படுத்தல் ன்றியமையாதது என உணர்ந்து கூறினார்.

"முற்பிறப்பு வினையால் செயலால் பொருள் வருவது இல்லை. அதுபோல் முற்பிறப்பு வினையால் பொருள் இல்லாது போவதும் இல்லை" என்று உறுதி செய்தார்.

"முயற்சி திருவினை ஆக்கம்: முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்”

(616)

என்று இப்பிறப்பில் செய்யும் முயற்சியும் முயற்சி இல்லா மையுமே பொருளாக்கமும், பொருள் நீக்கமும் ஆகின்றன என்பதைக் கட்டளை வகையால் கூறினார்.

முயற்சியாளன் தான் முயன்று பாடுபட்ட அளவுக்குக் கட்டாயம் பயன் பெற்றே ஆவான் என்பதை,

"முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்" என்றார்.

“என் குடியைப் பொருள் நிலையால் பொலியச் செய்வேன் என உறுதி கொண்டு ஒருவன் உழைத்தால், அவனுக்குத் தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு முன்வந்து நின்று உதவும்” என உறுதி உரைத்தார்.

அது,