உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

“குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும"

(1023)

என்பது. இவற்றின் மேலாணையாக ஊக்கப்படுத்திச் "செய்க பொருளை” என்றார்.நாடு கடந்தும் உன் புகழை நாட்டும் அது என்றும் கூறினார். “குடி என்னும் குன்றா விளக்கம்” மேலும் மேலும் சுடரப், “பொருள் என்னும் பொய்யா விளக்கம் உடனாகி - ஒன்றாகித் திகழ வேண்டும் என்றார்!

விளக்குத் திரியில் பற்றிய கருக்கே மடிச் சோம்பல்; கருக்குத் திரியில் தீப்பற்றாது; சுடர்விட்டும் எரியாது; அவ்வாறே மடியன் பிறந்த குடியும் பொருட் பொலிவு அல்லது பொருள் ஒளி பெறாது. சோம்பல் கருக்கால் குடி அவனுக்கு முன்னாகவே மடிந்து போகும் என்று உருவகக் காட்சியால் உரைத்தார்.

முற்பிறப்பொடு பொருளைத் தொடர்புறுத்திப் பேசாமை இச்சான்றுகளால் புலப்படும். முயற்சியொடு சார்த்தி உரைத் தமையும் புலப்படும்.

அறவோனிடம்தான் செல்வம் உண்டு என்னும் கருத்தை ஏற்காதவர் திருவள்ளுவர்.

பண்பிலானிடமும் செல்வம் உண்டு என்பதை,

“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று”

(1000)

என்று கூறினார். பேதையிடத்தும் பேயனிடத்தும் பெருஞ்

செல்வம் உண்டு என்பதை,

“ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை

(837)

“அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து”

என்பவற்றால் தெளிவித்தார். கருமியின் செல்வத்தை,

“வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்”

என்பதால் உரைத்தார்.

(565)

(1001)