உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

187

66

"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம் பழுத் தற்று”

(1008)

என்பதால் நஞ்சு நெஞ்சால் நலிப்பவன் என்பதை நாட்டினார்.

அவன் நிலத்திற்குப் பாரம் என்பதை,

“ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை”

என வருந்திக் கூறினார்.

(1003)

அல்லோரிடமும் செல்வம் உண்டு என்பதைக் குறிக்கும் சான்றுகளுள் சில இவை.

இனி, நல்லோரிடமும் வறுமை உண்டு என்பதையும் குறிக்கிறார். சிறந்த நல்லியல்பு வாய்ந்தார்க்கும் வறுமை உண்டு: அவர் கொண்ட வறுமை உலக நலஞ் செய்யும் மழை வறட்சி யுற்றது போன்றது என்றார்.

"சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து”

(1010)

சங்கைச் சுடச்சுட ஒளிமிகுவது போல, நல்லோரை வறுமை வாட்ட வாட்டப் பெருமை மிகும் என்பதையும், அவர் இறப்பும் மறவா இறப்பு என்பதையும்,

“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது'

எனத் தெளிவாக்குவார்.

(235)

நல்லோர் தாம் பெற்ற வறுமைக்கு வருந்தார். அவர், துன்பத்தை இன்பமாகக் கருதவும், துன்பம் வரும்போது நகைத்து வெற்றி காணவும் பழகிப் போனவர். அவர்க்கு வறுமையில் உண்டாகும் துயர் ஒன்றே; அது பிறர்க்கு உதவ வாய்க்க வில்லையே என்பதுதான் என்கிறார்.

“நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு

என்பது அது.

(219)

“பேரறிவாளன் திரு ஊருணி நீர் நிறைந்தது" என்றும் “நயனுடையான் திரு, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது” என்றும்