உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

“பெருந்தகையான் திரு, மருந்தாகிப் பயன் செய்யும் மரம்”

என்றும் உவமைப் படக் காட்டுகிறார். "பொருள், அல்லோரிடமும் உண்டு; நல்லோரிடமும் உண்டு” என்பதையும் இவற்றால் உறுதிப்படுத்துகிறார்.

வறுமையும் வளமையும் பொருளையுடையான் இயல்பால் வருவதும், நிற்பதும், செல்வதும் என்பதையும் தெளிவிக்கிறார்.

கடுஞ்சொல் கூறுவான், இரக்கம் இல்லான், அழப் படுத்துவான், கள்ளமும் - வஞ்சகமும் புரிவான்; பொறாமைப் படுவான், நடுவுநிலை தவறிப் பொருள் ஈட்டுவான், மயக்கும் கள்ளிலும் - சூதிலும் மையலிலும் ஈடுபடுவான். இன்னவர், பொருளைப் பெறார்; போற்றார்; இழந்து போவார் என விரியக் கூறுகிறார்.

-

செல்வர் சிலராகவும், வறியர் பலராகவும் இருப்பது எதனால் எனின் கடுமுயற்சியாளர் சிலராகவும், முயற்சி யிலாமையர் பலராகவும் இருப்பதேயாம் என்பது கண்டோம். ஆனால் தவ நிறைவில் வரும்,

"இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்”

(270)

என்பதற்கு, "உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனின் அது, தவஞ் செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல்" என்று பலர் உரை கண்டனர். அவர்கள்,

"ஒரு பிறப்பில் தவம் செய்தவர்களே மறுபிறப்பில் செல்வ முடையவராவர். அப்பிறப்பில் தவம் செய்யாதவரோ மறு பிறப்பில் செல்வமுடையவராகார்" என்று விளக்கமும் கூறினர்.

'தவம்,என்னும் அதிகாரத்திலுள்ள இக்குறட்கு, "தவம் இலர் பலராகத் தவமுடையார் சிலராக இருப்பது, உறுதிப்பாடு உடையார் சிலராகவும், உறுதிப்பாடு இல்லார் பலராகவும் இருப்பதேயாம்” என்னும் நேர் பொருள் கண்டிருப்பின் பிறப்பு, முன் வினை பற்றிய கருத்துத் தோன்றியிராவாம்.

இக் கருத்தின் அழுத்தத்தாலேயே அறன் வலியுறுத்தலில் வரும்,