உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

189

66

'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை”?

(37)

என்னும் குறளுக்கும் “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம் அளவை யான் உணர்த்தல் வேண்டா; சிவிகையைக் காவு (தாங்கு) வானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்" என உரை கண்டனர்.

அறம் செய்தார் அமர்ந்திருக்கப் பாவம் செய்தார் சுமப்பர் என்பது உழைப்பை இழிவு செய்து, உழையாரை உயர்த்துவது ஆகிவிடும் அல்லவா!

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” (1032)

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” (1033)

“சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்” (1031)

“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கு நிலை” (1036)

என்றெல்லாம் பாராட்டும் “கை செய்தூண் மாலையவரை”ப் பழிக்கவோ செய்வார்? “சிவிகைச் சுமப்பும் அமர்வும் அறப்பயன் அன்று; பொருட்பயன்" என்பதே வள்ளுவ நோக்காம்,

"முயற்சியால் தேடும் பொருளை முன்வினைக் காக்கல் முறையன்று” என்பது வள்ளுவத் தெளிவாம்! இதற்கு மாறாகக் காண்பது வள்ளுவர் வாயுறையன்றி, அவர் வாயுரைக்கு மாறுரையாக வெளிப்பட்டவையாம்!