உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

இல்லை; வெற்றி நகை! வீறு நகை!

193

முதுகில் கை வைத்துத் திமிலைப் பற்றி ஏறி, திமிரிய அதன் முதுகில் படுத்துக் கொம்பைத் திருகி நிலத்தில் மண்டியிடச் செய்யவல்ல நகை!

66

-

அதனை அடுத்து ஊர்வது" அக் காளையேற்றை அடுத்து அதன்மேல் ஏறி ஊர்தியாகக் கொள்வது.

"அஃது ஒப்பது இல்.

“அவ்வீறு போல வீறு ஒன்று இல்லை” என்னும் தூண்டல்! தூண்டலுக்கு விளைவு துலக்கம்!

வெற்றி மாலை குவிகின்றது!

66

'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்” (611)

என்பது கனவு இல்லை! நனவாகின்றது!

வெற்றி மேல் வெற்றி பெற்றவன் செய்யானா?

-

-

ஊரோட்டம் மாவட்ட ஓட்டம் மாநில ஓட்டம் - உலக

ஓட்டம் என உயராவா?

உலக ஓட்டமும் வெல்லலாம்!

ஒருவன் வெல்லத்தானே செய்கிறான்?

அவனால் முடிந்தது உன்னால் முடியாதா?

முடியும் என முடிவு செய்!

எண்ணியது எண்ணியபடி எய்தலாம்! 'உள்ளிய வெல்லாம் உடனெய்தும்!'

வை வள்ளுவ வாய்மொழி ஊக்கிகள்!